முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சிங்கப்பூர் நிறுவனம் மூலமாக இலங்கை யில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் ரூ.26,000 கோடி (385 கோடி டாலர்) முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த விஷயத்தில் உடன் பங்குதாரராக இணைய முயன்ற ஓமன் நிறுவனம் ஒரே நாளில் இந்த திட்டத்திலிருந்து விலகி ஓடி விட்டது ஏன் என்பது குறித்தும், இவ்வளவு மிகப்பெரிய தொகைக்கு அதிபதியாக இவர்களால் எப்படி முடிந்தது எனவும் பல தகவல்கள் வந்துள்ளன.
சில்வர் பார்க் இண்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் (தோராயமாக ரூ.26000 கோடி) அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் அண்மையில் அறிவிததது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் தேசிய ஒழுங்குமுறை கணக்கு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப் பட்டுள்ள நிறுவனம் ஆகும்.
அதன் இயக்குநர்களாக சென்னையைச் சேர்ந்த ஜெகத் ரட்சகன் நிஷா, ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த், ஜெகத்ரட்சகன் அனுசுயா உள்ளிட்டோர் இருப்பதாக பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. இயக்குநர்களில் ஒருவரான சந்தீப் ஆனந்த் முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட் பாளருமான ஜெகத்ரட்சகனின் மகன், நிஷா அவரது மகள், அனுசுயா அவரது மனைவி ஆவார்.
இந்த மூவரையும் இயக்குநர்களாகக் கொண்ட சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண் ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாகவும், இந்த வர்த்தக திட்டத்தில் 70 சதவீத நிதியை சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் முதலீடு செய்யும் என்றும் எஞ்சிய தொகையான 2000 மில்லியன் டாலர் நிதியை அந்நிறுவனம் கடன் மூலமாக திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்த நிலையில், ‘‘சிங்கப்பூர் நிறுவனத்தின் இந்திய வர்த்தக தொடர்புகள் குறித்து எங்களுக்கு தெரியும். இதுதொடர்பான ஆவணங்களில் ஜெகத்ரட்சகன் என்பவர் கையெழுத் திட்டுள்ளார்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஓமன் அரசின் எண்ணெய் மற்றும் எரிவாயு அமைச்சகம் மற்றும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கூட்டு நிதியுதவியோடு எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சேமிப்பு வர்த்தக திட்டத்துக்கான பணிகள் வெகுவிரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது.
ஆனால், இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே (புதன்கிழமை) இந்த திட்டத்தில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று ஓமன் எண்ணெய் அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.
இத்தகைய சூழலில் இலங்கை முதலீட்டு அமைச்சகம் ஓர் விளக்கத்தை வெளியிட்டது.
அதில், ‘‘எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் பங்குகள் தொடர்பாக ஓமன் எண்ணெய் அமைச்சகத்துக்கும் சிங்கப்பூர் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்துக்கும் எவ்வித ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை என்றும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல் படுத்தப்படும் என்றும் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் வாரியத்திடம் நம்பிக்கை அளித்துள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த திட்டத்தில் தங்களுக்கு எந்த பங்கும் கிடையாது என்று ஓமன் எண்ணெய் அமைச்சகம் மறுப்பு தெரிவித்து ஓட்டம் பிடித்தது. இதற்கு காரணம் தங்களோடு இணைந்து ரூ.26000 கோடி முதலீடு செய்ய வந்த சிங்கப்பூர் சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள் தமிழக அரசியல்வாதிகள் என்பதும், அவர்கள் சார்ந்த கட்சிக்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் ( 2G ) தொடர்பான வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் இருப்பதாகவும் ஓமன் அமைச்சகத்துக்கு கூறப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பினாமி நிறுவனங்கள் பெயரில் நிலக்கரி வயல்களை குத்தகைக்கு எடுத்து தரமற்ற நிலக்கரியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து தமிழக மின் நிலையங்களுக்கு விற்பனை செய்து தரமற்ற மின்சாரம் உற்பத்தி செய்ய காரணமாக இருந்த நேர்மையற்ற, தொழில் தெரியாத வர்த்தகர்கள் என எடுத்துக் கூறப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த பணம் இந்தியாவிலிருந்து பெறப்பட்ட ஊழல் அரசியல்வாதிகளின் கருப்பு பணத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும், மோடி அரசின் கண்காணிப்பால் மீண்டும் அங்கு கொண்டு செல்ல முடியாமல் நின்றுபோன பணம் என்றும், இதனால் கூட்டாக தொடங்கவுள்ள தொழிலுக்கு எதிர் காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் எடுத்துக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதை இலங்கையை சேர்ந்த அதிகாரியோ அல்லது அரசியல்வாதிகள் ஓமன் எண்ணெய் அமைச்சகத்து போட்டுக் கொடுத்துவிட்டார்கள் எனவும், இது தெரிந்த ஓமன் எண்ணெய் அமைச்சகம் தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. ஓமன் நிறுவனம் மட்டும் பின்வாங்கியிருக்காவிட்டால் இந்த விவகாரம் வெளியே வந்திருக்காது எனவும் கூறப்படுகிறது.
ஜெகத்ரட்சகன் விளக்கம்:
இந்த நிலையில் அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனிடம் தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, ‘‘இதில், சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது.
இப்போதுதான் விண்ணப்பித் திருக்கிறோம். அதன் மீது இலங்கை அரசு பரிசீலனை செய்து வருகிறது. எங்கள் சொந்த நிறுவனம் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதை தேவையில்லாமல் பெரிதாக்கியுள்ளனர்’’என்றார்..
மக்கள் கேள்வி:
ஆனால் பொது மக்களின் கேள்வி என்னவென்றால் இந்த திட்டத்தில் மட்டுமே முதலீடு செய்ய உங்களிடத்தில் ரூ.26000 கோடி முதலீடு உள்ளதென்றால் , வேறு என்னென்ன திட்டங்களில் உங்கள் ஒரு குடும்பத்தினர் முதலீடு செய்துள்ளீர்கள்.
உங்கள் அடிப்படை தொழில் என்ன? ஒரு போணியாகாத ஓட்டலையும், தரமற்ற கல்வி நிறுவனத்தையும் வைத்துக் கொண்டு ஒரு மாநில அரசாங்க வருமானத்தின் பாதியை உங்களால் எப்படி சம்பாதிக்க முடிந்தது. ஒரு 2 ம் கட்ட தலைவரான உங்களிடமே இலட்சக்கணக்கான கோடி சொத்துக்கள் என்றால் முதல் கட்ட தலைவர்களிடம் எவ்வளவு இருக்கும் ?.
திமுகவினர் 30 இலட்சம் கோடிக்கும் மேலாக மக்களிடம் கடந்த 20 ஆண்டுகளில் கொள்ளை அடித்து பல்வேறு நாடுகளில் பதுக்கி வைத்துள்ளதாக சமீபத்தில் பல்வேறு சமூக ஊடங்களில் கசிந்து வரும் தகவல்களை இது உண்மையாக்குகிறது.
2 ஜி ஊழல் அதல பாதாளம் வரை பாய்ந்திருக்கிறது என்று கூறுவதன் உண்மை பின்னணி இதுதானா? நீங்களெல்லாம் பொது சேவை செய்ய முன்வரலாமா ? இந்தியாவில் நீங்கள் கொள்ளை அடித்த இலட்சக்கணக்கான கோடிகளை இலங்கையில் முதலீடு செய்ய வசதியாகத்தான் விடுதலை புலிகளையும், ஈழ மக்களையும் கொல்ல வழி ஏற்படுத்தினீர்களா ? ராஜபக்ஷேவிடம் டி.ஆர்.பாலு, கனி மொழி உட்பட மற்ற உங்கள் எம்பிக்கள் ஆகியோர் அதிகம் கொஞ்சி மகிழ்ந்து பேசியது இதற்காகத்தானா ? மக்களை பகல் வேடம் போட்டுக் கொண்டு இவ்வாறு ஏமாற்றலாமா என பலவாறு கேள்விகளை மக்கள் கேட்கத் தொடங்கி விட்டனர்.
No comments:
Post a Comment