''கூட்டணி கட்சிகளின் தேர்தல் செலவிற்கு, தி.மு.க., பணம் கொடுத்தது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அவர் அளித்த பேட்டி:
ஜனநாயகத்தை நம்பி இருக்கிற இயக்கங்களுக்கு, தி.மு.க., பேரதிர்ச்சியை தந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் வழங்கியதாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. வெள்ளையில் இவ்வளவு வழங்கினால், கருப்பில் எவ்வளவு வழங்கி இருப்பர்?
லோக்சபா தேர்தலில், அனைவருக்கும் பணம் வழங்கி, குறுக்கு வழியில் வெற்றி பெற நினைத்தனர். அது, தற்காலிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும், 20 கோடி ரூபாய் வரை, வழங்கி உள்ளனர். இதை, மத்திய அரசு எளிதில் விட்டு விடக்கூடாது. உண்மை நிலையை கண்டறிய, வேட்பாளர்களுக்கு எவ்வளவு கொடுத்தனர் என்பதை, விசாரிக்க வேண்டும். 1,000 கோடி ரூபாய் வரை விளையாடி உள்ளது. சி.பி.ஐ., விசாரித்தால் நல்லது.இவ்வாறு, அவர் கூறினார்.

பிரேம லதா கேள்வி
இதற்கிடையில், தே.மு.தி.க., பொருளாளர், பிரேமலதா திண்டுக்கல் மாவட்டம், பழநியில் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலிலும், தற்போதைய கூட்டணி தொடரும். குறுக்கு வழியில் முன்னேற நினைப்போர், 'நீட்' தேர்வில் தவறு செய்கின்றனர். தேர்தல் நிதியாக, கம்யூ., கட்சிகளுக்கு, தி.மு.க., 25 கோடி ரூபாய் வழங்கியதாக தகவல் வருகிறது. தி.மு.க., தலைவர், ஸ்டாலின் மற்றும் கம்யூ., கட்சியினர், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment