ரொம்ப தூரமெல்லாம் போக வேண்டாம் யாரெல்லாம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க
ஒரு சுலபமான வழி
வெற்றிபெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் யார் என்று பாருங்கள் அவர்கள் மருத்துவத்துறையில் இருந்தால் உங்களுடைய வேலை சுலபம்
அந்த மாணவர்களை மட்டும் தீவிரமாக விசாரித்தால் உண்மை வெளிப்படும்
அதற்காக எல்லா மருத்துவ பெற்றோர்களின் குழந்தைகளும் அப்படி இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை
பெரும்பாலும் அப்படித்தான்
அதுவும் சொந்த மருத்துவமனை வைத்திருந்தால் மீன் சிக்கிவிட்டது என்று அர்த்தம்
சொந்த மருத்துவமனை வைக்க இன்றைய நிலையில் 10 கோடியாவது தேவைப்படும்
இப்படிப்பட்ட நிலையில் பல கோடிகள் செலவழித்து அதன் நிர்வாகத்தை வேறு யாரோ ஒருவன் இடம் விட்டுச்செல்ல அந்த பெற்றோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை
Frog dissection செய்வதற்கே கூட பயந்து நடுங்கும் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோரின் மருத்துவமனையை கையாள்வதற்காக இதுநாள் வரை காசு கொடுத்து டாக்டர் ஆனவர்கள் தான்
இதுநாள் வரை இவர்களுக்கு கைகொடுத்தது பாரிவேந்தர் ஜெகத்ரட்சகன் ஏசி சண்முகம் போன்றவர்கள்
இப்போது புது வழி கண்டுபிடித்து விட்டார்கள்
சரி போகட்டும்
சில வருடங்களுக்கு முன் நான் தங்கியிருந்த பகுதியில் ஒரு பெண் மருத்துவர் திறமைசாலி கைராசியும் கூட
பெரும்புகழ் பெற்றவர்
அவருடைய மருத்துவமனை பெரிதாக வளர்ந்தது
ஆனால் என்ன செய்ய
அவருடைய மகன்களுக்கு சுட்டுப் போட்டாலும் கூட மருத்துவம் வரவில்லை
தனக்குப் பிறகு இந்த மருத்துவமனை யார் கவனிப்பார்கள் சொத்து கைவிட்டுப் போய்விடுமே என்ற கவலை அந்தப் பெண் மருத்துவருக்கு
ஒரு மகனை அனெஸ்தீஷியா சீட் வாங்கி பாஸ் செய்ய வைத்தார்
அவனை டாக்டர் என்றே அனைவரும் கூப்பிட வேண்டும்
மயக்க மருந்து கொடுக்க வெளியே இருந்து ஆட்கள் வருவார்கள்
ஆபரேஷன் தியேட்டரில் இருந்து குறுக்கும் நெடுக்குமாக ஓடுவான்
சரி இதுவரை சமாளித்தாகிவிட்டது
அந்த மகனுக்கு ஒரு டாக்டர் பெண்ணாக பார்த்தார்கள்
திருமணம் நடந்து மாமியாரும் மருமகளும் மருத்துவமனையை கொஞ்ச காலம் ஓட்டினார்கள்
மாமியார் மறைந்து விட மகனும் மருமகளும் மருத்துவமனையை நடத்த ஒரு நாள் சிக்கல் ஒன்று வந்தது
ஒரு குழந்தைக்கு அந்த மகன் டாக்டர்(!)மகன் தவறான ஊசி போட அது இறந்து போக மகன் சில நாட்கள் ஜெயிலுக்கு போய் வந்து மறுபடியும் மருத்துவம் பார்க்கிறார் கேன்சரில் இருந்து
கிளப்டோமேனியா வரை
கிளப்டோமேனியா வரை
மற்றொரு மகன் அதே மருத்துவமனையில் மருந்தாளுனர்
படித்தது என்ன என தெரியவில்லை
சில வருடங்களுக்கு முன் தனது பத்து வயது மகனை பிரசவம் பார்க்க சொன்ன திருச்சி டாக்டர் தம்பதிகளை நமக்கு தெரியும் தானே
எனக்கு தெரிந்து எக்கச்சக்கமான போலி டிகிரிகள்
மருத்துவமனை சாவுகள்
நேற்றைய கைது பலருக்கும் பயத்தை ஏற்படுத்தி விட்டது
நேற்றைய கைது பலருக்கும் பயத்தை ஏற்படுத்தி விட்டது
இதனால் தான் இந்த திராவிட குலக்கல்வியாளர்கள் நீட்டை ஒழிக்க பாடுபடுகிறார்கள்
எவன் செத்தால் நமக்கென்ன
என்று காசு பறிக்கும் இந்த கூட்டம் ஒழியாதவரை ஒவ்வொருவரும் எமனின் வாயிலில்
என்று காசு பறிக்கும் இந்த கூட்டம் ஒழியாதவரை ஒவ்வொருவரும் எமனின் வாயிலில்
உண்மையாக படித்து நல்ல முறையில் தொழில் தர்மத்தை காப்பாற்றும் நல்ல டாக்டர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
No comments:
Post a Comment