*வேதனை பதிவு*
அய்யா நிலத்தை அளந்து குடுங்க, பக்கத்து தோட்டத்து காரன் பிரச்சணை பண்ணுறான்
இவ்வளவு ரூபா செலவு ஆகும், ஒரே வாரத்துல வந்து அளந்து தர்றோம், இல்லாட்டி ஆறும் மாசம் ஆகும்
தான் செய்ய வேண்டிய பணிக்கே, தன் தமிழ் மக்கள் நிலத்தை அளக்க தமிழ் அதிகாரியே லஞ்சம் வாங்கும் போது
அந்த பணிக்கு ஹிந்திக்காரன் வந்தா என்ன? இங்கிலாந்து காரன் வந்தா என்ன?
இன்னருக்கு இன்னார் பிறந்தார்னு எழுதி தர லஞ்சம், பிளான் approval வாங்க லஞ்சம், தண்ணி கனெக்க்ஷனுக்கு லஞ்சம், கேஸ் போடாம இருக்க லஞ்சம்,அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க லஞ்சம், மின் இணைப்பு பெற லஞ்சம், போஸ்டிங் போட லஞ்சம் , RTO ஆபீஸில் லஞ்சம். தமிழன் நான் ஒட்டுபோட எனக்கும் லஞ்சம், எங்கும் லஞ்சம். எதிலும் லஞ்சம். லஞ்சமின்றி எதுவும் நடக்காது என்ற நிலை.
தமிழ்நாட்டில் தமிழ்மக்களை , தமிழ் நாட்டை சேர்ந்த ஊழியர்களே சுரண்டி லஞ்சம் வாங்கி திங்கும் போது , அந்த அலுவலகத்துக்கு வெளி மாநிலத்து காரன் வேலை பார்த்தா என்ன? எவன் வேலை பார்த்தா என்ன?
No comments:
Post a Comment