Tuesday, September 24, 2019

விரதங்களில்_தலையாயது_ஏகாதசி_விரதம்*

சமஸ்கிருத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள்படும். இங்கு அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொன்றாவது நாளாகும். இந்நாளில் விரதம் இருப்பதை எல்லா சாஸ்த்திரங்களும் வலியுறுத்துகின்றன. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும். ஏனெனில் மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டால் பாவங்கள் ஏதும் உண்டாவதில்லை. ஆனால் ஏகாதசி விரதத்தைக் கடைபிடிக்காவிட்டால் கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும். பிரம்மன் படைத்த உயிர்களில் கொடூரமான பாவங்களையே அங்கங்களாக கொண்ட பாவ புருஷனும் ஒருவன். மக்களைப் பாவச்செயல்களில் செலுத்தி கொடூரமான நரகத்தில் செலுத்துவதே அவனுக்கு விதிக்கப்பட்ட வேலை.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை எமலோகம் சென்று பார்த்த போது அங்கு உயிர்கள் தங்களுடைய பாவ விளைவுகளினால் கொடூரமான நரகங்களில் துன்புறுவதைக் கண்டார். அவர்களிடம் கருணைகொண்ட பகவான் கிருஷ்ணர் ஏகாதசியின் மகிமையை அவர்களுக்கு எடுத்துரைக்க அதை அவர்கள் கடைபிடித்த உடனே பாவங்களிலிருந்து விடுபட்டு சொர்க்க லோகங்களை அடைந்தனர். அது முதல் ஏகாதசி மகிமையால் எல்லோரும் புண்ணியபுருஷராக மாற சொர்க்க லோகம் நிரம்பியது. நரகங்கள் வெறிச்சோடி காலியாகவும் ஆயின. பாவப்புருஷனுக்கு துளியும் வேலையில்லாமல் போனது. இதனால் பாவப்புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் முறையிட அதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏகாதசி அன்று தானிய, பருப்பு (அரிசி, நவதானியங்கள், பருப்புவகைகள், பயறுவகைகள், இட்லி,தோசை, சப்பாத்தி, பூரி, உப்புமா, கடுகு, உளுந்து தாளித்தது, காய்கறிகளில் பீன்ஸ், அவரை, மொச்சைவகையறா) இந்த வகை உணவுகளை உண்பவர் உன் வசப்பட்டு கொடூரமான பாவங்கள் செய்த கர்மம் உண்டாகும் என்று வரமளித்தார்.
ஆனால் சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, நிலக்கடலை எண்ணெய், காய்கனிகள், பழங்கள், பால்,தயிர் போன்றவற்றை பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
ஏகாதசிக்கு முந்திய நாளான தசமி அன்று பகல் மட்டும் உணவு உட்கொண்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். அதேபோல் ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர் கூட அருந்தாவர்கள் துளசி தீர்த்ததையும், மற்றவர்கள் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம். ஏகாதசி விரத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் ஆகும் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலன் கிடைப்பதில்லை.
ஏகாதசி அன்று செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்
குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே
ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
என்ற மந்திரத்தை 108 முறை (ஒரு சுற்று) சொல்ல வேண்டும். இதுபோல குறைந்தபட்சம் 25 சுற்றுகள் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மற்றும் பகவத்கீதை, ஸ்ரீமத்பாகவதம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். ஏகாதசி அன்று சினிமா பார்ப்பது, பரமபதம் ஆடுவது, வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்யகூடாது.
நிர்ஜலஏகாதசி (பாண்டவ அல்லது பீம ஏகாதசி ) அன்று முழுவிரதம் இருந்தால் மற்ற 24 ஏகாதசின் பலனையும் அடையலாம்
வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி ) அன்று முழுவிரதம் இருந்தால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
சுலபமாக முக்திப் பாதையைக் காட்டுகிறார்.
ஏகாதசி விரதம் பற்றிய தகவல்கள்
🍎🍌🍊🍌🍐🍐🍊🍊🍋🍋🍎
ஜீவ கோஸ்வாமியின் பக்தி ஸந்தர்ப்ப நூலில் ஸ்கந்த புராணத்தில் இருந்து ஒரு மேற்கோள் காட்டப்பட்டுள்ளது . ஏகாதேசியன்று தானியங்களை உண்பவன் தனது தாய், தந்தை, சகோதரர் மற்றும் ஆன்மீக குருவை கொலை செய்தவனாகின்றான் என்றும், அவன் வைகுண்ட லோகத்திற்கு ஏற்றம் பெற்றால் கூட வீழ்ச்சியடைகின்றான் என்றும், அங்கே எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏகாதேசியன்று தானியங்கள், பருப்பு வகைகள் உள்பட அனைத்து தினசரி உணவும் விஷ்ணுவிற்கு சமைக்கப்படுகின்றன, ஆனால் அந்த விஷ்ணு பிரசாதத்தினைக்கூட ஏகாதசியன்று ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வைஷ்ணவர் அறிவுறுத்தப்படுகிறார். பகவான் விஷ்ணுவுக்கு அர்பணிக்கப்படாத எந்த உணவுப் பொருட்களையும் வைஷ்ணவன் ஏற்ப்தில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஏகாதசியன்று விஷ்ணுவிற்கு அர்பணிக்கப்பட்ட மகா பிரசாதத்தினைக்கூட வைஷ்ணவன் தீண்டக் கூடாது ; அத்தகு பிரசாதம் அப்படியே வைக்கப்பட்டு மறுநாள் உண்ணப்படலாம். பகவான் விஷ்ணுவிற்கு நைவேத்தியம் செய்யப்பட்டதாக இருந்தாலும், ஏகாதசியன்று எந்த வகையான தானியத்தையும் ஏற்பதிலிருந்து ஒருவன் கண்டிப்பாகத் தடை செய்யப் படுகிறான்.
(பொருளுரை / ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் / ஆதிலீலை / 15. 10 )

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...