காஷ்மீர் விவகாரத்தில் பொது மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும் என்றார்களே அதை இந்தியை பொது மொழி ஆக்குவதில் பின்பற்றினால் என்ன? இந்திய மக்கள் அனைவரிடமும் எந்த மொழி பொதுமொழி ஆக வேண்டும் என்று கருத்து கேட்போம் எந்த மொழி வெற்றி பெறுகிறதோ அந்த மொழியை இந்தியாவின் பொதுமொழி என்று ஏற்றுக்கொள்வோம் ஒத்துக்கொள்வார்களா இந்த திராவிட பொறம்போக்குகள்? இந்தியாவில் பெரும்பானமையான மக்கள் ஹிந்துக்கள் அதனால் இது இந்து நாடு என்பவர்கள் இந்தியாவில் 58 சதவீத மக்கள் இந்தியை தாய் மொழியாகவும் மேலும் ஒரு 20 சதவீத மக்கள் இந்தியை சரளமாக பேச கூடியவராகவும் இருக்கிறார்களே அப்படி பட்ட இந்தி மொழியை பொதுமொழி என்று அறிவித்தால் என்ன தவறு?
இந்தி எதிர்பாளர்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்
1. தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக யாரிடம் திணிக்க பட்டுள்ளது? இன்று வரை விருப்ப பாடமாக தானே உள்ளது.
2. இந்தி எதிர்பாளர்களே, உங்களில் எத்தனை பேர் அலுவல் நிமித்தமாக தமிழகத்தை தாண்டி வெளி மாநிலங்களில் சென்று மாத, வருட கணக்கில் தங்கியுள்ளீர்கள், அப்படி தங்கும் போழ்து உங்களுக்கு எந்த மொழி பிரச்னையும் வந்தது இல்லையா?
3. நம்மில் எத்தனை பேர் ஆங்கிலத்தில் சரளமாக உரையாட கூடியவர்கள்? அப்படியே நாம் ஆங்கிலத்தில் உரையாடினாலும் அதை புரிந்து கொண்டு நமக்கு விடை அளிக்க கூடியளவு ஆங்கில அறிவு இந்த நாட்டில் எத்தனை பேருக்கு உண்டு?
4. வருடத்துக்கு 4 முதல் 5 லட்சம் தமிழ் மாணவர்கள் தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபா நடத்தும் இந்தி தேர்வுகளை எவருடைய வற்புறுத்தலும் இல்லாமல் சுயமாக சொந்த பணத்தை செலவழித்து படித்து எழுதுகிறார்களே இது உங்களுக்கு தெரியுமா? அது எதற்காக என்று யோசித்தீர்களா?
5 ஒரு அந்நிய மொழியை மூன்றாவது மொழியாக படித்தால் என் மொழி வளர்ச்சி தடை பெரும் என்று பேசி நம் மொழியை ஏன் இழிவு படுத்தாதீர்கள். நம் மொழி கல் தோன்றிய முன் தோன்றா காலத்து முத்த குடியனரால் பேசப்பட்டு வந்த மொழி. இந்தி என்ற சக்களத்தி வந்து அளித்து விட கூடிய அளவுக்கு கேவலமானது அல்ல நம் தமிழ் மொழி.
No comments:
Post a Comment