கூலிக்கு மாரடிக்கும் கம்யூனிஸ்ட்கள்.
கம்யூனிஸ்ட்களின் வேஷத்தை கலைத்த திமுக.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு திமுக கொடுத்த ரூ. 25 கோடி:
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தேர்தல் நன்கொடையாக திமுக ரூ. 25 கோடி கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணைய பிரமாணப் பத்திரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் அரசியல் கட்சிகள் அதுதொடர்பான வரவு செலவு விபரங்களை, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கணக்குகளை அரசியல் கட்சிகள் சமர்ப்பித்து வருகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஜூலை 10 மற்றும் செப்டம்பர் 13 ஆகிய இரு தேதிகளில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தேர்தல் செலவு தோராயமாக ரூ. 7.2 கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை.
அதேசமயம் திமுக தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 10 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடியும் தேர்தல் நிதியாக அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மொத்த செலவு ரூ. 70 கோடி என்றும், அதில் ரூ. 40 கோடி கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதியாக வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மார்க்சிசிஸ்டுக்கு ஏப்ரல் 5, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மூன்று தவணைகளாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தவணைகளாகவும் தேர்தல் நிதி வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரத்தில் நிதி பெற்றது குறித்த விபரம் தெரிவிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment