லோதா கமிட்டி பரிந்துரையை பிசிசிஐ நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்த வினோத் ராய் தலைமையில் நிர்வாகக்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. பிசிசிஐ-யில் உள்ள சீர்கேட்டை களைந்து, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதுதான் நிர்வாகக்குழுவின் வேலை. இந்த வேலை முடியும் வரை வினோத் ராய் குழுவுதான் பிசிசிஐ-யில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரத்தை பெற்று இருந்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் 23-ந்தேதிக்குள் பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டது. இதனடிப்படையில் மாநில சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டன.

அக்டோபர் 23-ந்தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் முடிந்த பின்னர் நிர்வாகக்குழு ராஜினாமா செய்யும் என்று வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
இதனால் 33 மாதங்களாக செயல்பட்டு வந்த நிர்வாகக்குழுவின் செயல்பாடு முடிவுக்கு வர இருக்கிறது.
இதனால் 33 மாதங்களாக செயல்பட்டு வந்த நிர்வாகக்குழுவின் செயல்பாடு முடிவுக்கு வர இருக்கிறது.
No comments:
Post a Comment