Sunday, September 22, 2019

முட்டையை ஆரோக்கியமாக சாப்பிடும் வழிகள் என்ன..??



முட்டையை தண்ணீரில் உப்பு போட்டு வேகவைத்து எடுப்பது சிறந்தது .
சிலர் முட்டையில் உள்ள மஞ்சள் கருவை தவிர்ப்பது உண்டு. ஆனால் அவ்வாறு செய்வது நல்லது அல்ல.
மஞ்சள் கருவையும் வெள்ளை கருவையும் சேர்த்து தான் உண்ண வேண்டும். அதுவே 100% நல்லது.
பொதுவாக , முட்டை ஓட்டை குப்பையில் எறிந்து விடுவோம் அல்லது தோட்டத்தில் செடிகளுக்கு அடியில் உரமாக போட்டு விடுவோம். அதில் உள்ள மருத்துவ பயன் யாருக்கும் தெரிவது இல்லை.
கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் எலும்பில் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் கால்சியம் சப்ளிமெண்ட்ரியை உட்கொள்வர். இது பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் சுண்ணாம்பு மூலம் தயாரிக்கப்படுகின்றது. இந்த மருந்துகளின் மூலக்கூறில் டைட்டானியம் டை ஆக்சைடு (titanium dioxide or silicon dioxide) எனும் வேதி பொருள் இருக்கும் இது உடலுக்கு நல்லது அல்ல. இந்த மருந்துகளில் கால்சியம் 30–40% மட்டும் தான் இருக்கும்.
கர்ப்பிணிகளுக்கும் 18 வயது குறைந்தவர்களுக்கும் கால்சியம் சப்ளிமெண்ட்டரி கொடுக்க கூடாது என்று அதன் லேபிளில் இருக்கும்.
அதற்கு மாற்றாக வீட்டிலேயே கால்சியம் சப்ளிமெண்ட்டரி தயாரிக்கலாம்.
முட்டை ஓட்டை நன்றாக கொதிக்கும் வெந்நீரில் போட்டுவிட்டு பிறகு கழுவி நிழலில் உலர்த்தி எடுத்து, சூடான வாணலியில் போட்டு வறுத்துவிட்டு அரைத்து ,நீரில் கரையும் அளவிற்கு சலித்து எடுத்து சேமித்து வையுங்கள். 2 அல்லது 3 நாளுக்கு ஒரு முறை 10மி .லி அளவு எடுத்து நீரில்கரைத்து அருந்தலாம். வடிகட்டி விட்டால் நல்லது.
இது 100% கால்சியம் மட்டுமே. இதற்கு ஆகும் செலவும் குறைவுதான். 100% இயற்கை முறையில் உருவாக்குகிறோம்.
பிராய்லர் கோழி முட்டைகளை விட(இதையும் பயன்படுத்தலாம்) நாட்டு கோழி & காடை முட்டை சிறந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...