வரதட்சணை கேட்பது தவறு', என்ற சட்டம் இயற்றப்பட்டாலும் இன்றளவிலும் பல பெண்கள் வரதட்சணை எனும் கொடுமைக்கு ஆளாகி கொண்டுதான் இருக்கிறார்கள்.
இப்படி பல வழக்குகளை விசாரித்து, வரதட்சணை கேட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியே, வரதட்சணை கேட்டு மருமகளை கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மற்றும் ஹைதராபாத் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராம் மோகன் ராவ். இவரது மருமகளான சிந்து என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் வரதட்சணை கேட்டு, மாமியார், மாமனார் மற்றும் கணவரால் தாக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.என்றாலும் சம்பந்தப்பட்டு இருப்பவர் ஓய்வு பெற்ற நீதிபதி என்கிற காரணத்தினால், சிந்துவின் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாமலேயே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு, சிந்து தாக்கப்பட்டதன் சிசிடிவி காணொளி வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பிட்ட காணொளியில் கணவர், மாமியார், மாமனார் என மாறி மாறி சிந்துவை தாக்குகின்றனர்.
அவரது 2வயது குழந்தை தாயின் காலை பிடித்து கதறி அழுதும், ஈவு இரக்கமின்றி தாக்குதல் தொடர்கிறது. இந்நிலையில் இப்படியொரு வலுவான ஆதாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ராம் மோகன் ராவ் மீது நடவடிக்கை எடுக்குமாறு பலரும் சிந்துவுக்கு ஆதரவாக குரல்கொடுக்க துவங்கியுள்ளனர்.
வரதட்சணைக்காக தன் மருகளிடம் இப்படி நடந்து கொள்ளும் இந்த நீதிபதி..?தன் பதவி காலத்தில் எப்படி நடந்து இருப்பார்.?அவரது தீர்ப்புகள் எப்படி இருந்து இருக்கும்?எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்பட்டார்களோ.?எத்தனை கொலைக்காரனும்,கொள்ளைக்காரனும் லஞ்சம் கொடுத்து விட்டு சுகமாக வெளியில் நடமாடுகிறார்களோ?இப்படி பசுந்தோல் போத்திய புலிகள் இன்னும் எத்தனை நீதிபதிகளாக இருந்து வேஷம் போடுகிறதோ?ம் ஆண்டவன்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment