ரமணருக்கு வந்த புற்று நோயை அவர் மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டார்.நாமாக இருந்தால் பதறிப் போவோம்.? நான் யார்?என்கிற கேள்விக்கு விடை கண்டவராதலால் தன் உடம்பு அவர் ரமணராக கருதவில்லை.உடம்புக்கு நேரும் எந்த ஒரு கோளாறு குறித்தும் கவலைப்படவில்லை.
திருமூவரது சித்தாந்தத்தின் படி உடம்பு என்பது உயிர் வாழத் தேவைப்படும் ஒரு வீடு.எப்பேர்ப்பட்ட கட்டிடமும் காலப்போக்கில் மழை காற்று மற்றும் பருவ மாற்றங்களால் பலத்தை இழந்து பழையதாகும்.இது மனித உடம்புக்கும் மிகப் பொருந்தும்.
அதிலும் பலர் வாழ்ந்தும் வசித்தும் வரும் வீடுகள் வேகமாய் பழமையடையும்.அதே போல ராமணரை பலரும் வந்து தரிசனம் செய்து அவர் முன் தங்கள் துன்பங்களை இறக்கி விட்டுச் சென்றதால் அந்த அதிர்வுகளை அவரது வலிமையான மனம் ஏற்க வில்லை.ஆனால் உடல் ஏற்றுக் கொண்டது.
விஞ்ஞான ரீதியாக இதைப் பற்றி சிந்தித்தால் மிகவே முரண்பாடாக தெரியும்.ரமணருக்கு வந்த புற்று நோய்க்கு
விஞ்ஞானம் அவரது உடலில் உள்ள நோய் கிருமியை காரணமாக கூறும்.ஆனால் நம்பிக்கை என்னும் உணர்வின் அடிப்படையில் பார்க்கும் போது பிறரது உணர்வின் தாக்கங்களை உடம்பானது வாங்கிக் கொள்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
விஞ்ஞானம் அவரது உடலில் உள்ள நோய் கிருமியை காரணமாக கூறும்.ஆனால் நம்பிக்கை என்னும் உணர்வின் அடிப்படையில் பார்க்கும் போது பிறரது உணர்வின் தாக்கங்களை உடம்பானது வாங்கிக் கொள்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
இப்படி தாக்கத்திற்கு ஆளான ரமணர் புற்று நோய் உபாதையான வலியை்ச்சியோடு அனுபவிக்க முனைந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.ஆனால் அதுவே உண்மை.
இந்த உடல் எப்போதும் சுகமாக இருக்கவே விரும்புகிறது.நடக்கும்
போது செருப்பு, குளிரும் போது போர்வை என்று உரியதைத் தேடி சுகப்பட முனைகிறது.பசி தாங்க மறுத்து நாளைய தேவைக்கும் இன்றே வாங்கி வைத்துக் கொள்கிறது.உணவுப் பதார்த்தங்களில் கூட கசப்பைத் தவிர்த்து இனிப்பை மிக விரும்புகிறது.

உலகம் முழுக்க எல்லா உயிர்களுமே சுகமாய் இருக்கவே விரும்புகின்றன.ரமணர் இதை எண்ணிச் சிரித்தார்.இந்த உடம்பின் மேல் தான் நமக்கு எவ்வளவு பயம்?
குறிப்பாக வலியை நினைக்கவே பயப்படும் வலிமை குன்றியவர்களாக நாமெல்லாருமே இருக்கிறோம்.எனவே வலியை நேசித்து மனதை அடக்க ரமணர் பெரிதும் விரும்பினார்.அதன் எதிரொலியாக அவரது புற்று நோயை குணப்படுத்த மருத்துவர்கள் முன் வந்து மயக்க மருந்து செலுத்த முனைந்த போது வேண்டாம் என்று கூறியவர்.
ரண சிகிச்சையை நீங்கள் செய்யுங்கள்.எவ்வளவு வலித்தாலும் நான் தாங்கிக் கொள்கிறேன்.எவ்வளவு அதிகமாக வலிக்கும் என்பதும் எனக்கு தெரிய வேண்டும் என்றாராம்!
No comments:
Post a Comment