Sunday, December 22, 2019

எனக்குள் நீ உனக்குள் நான் கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சிற்குள் சுடராக ஒளிரும் நாதனே சரணம்.

ஐயப்பன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்கு வருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.
இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்
பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.

ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு முறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதை செய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்ட போது அந்த அங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றே எழுந்திருப்பது போல் தோன்றும்.
கால்களில் காணப்படுவது கட்டு அல்ல; யோகப் பட்டம். ஐயப்பன் யோக நிலையில் இருப்பதால், அவர் காலில் கட்டப்பட்டுள்ள பட்டம் யோக பட்டம் எனப்படும். இதே மாதிரியான யோகப் பட்டத்தை, நீங்கள் யோக நரசிம்மர், யோக தட்சிணாமூர்த்தி போன்ற யோக நிலையில் அருளும் தெய்வ மூர்த்தங்களிலும் காணமுடியும். பகவான் சாஸ்தா இயற்கையாகவே யோகேஸ்வர ஸ்வரூபத்தில் உள்ளார். ஸ்கந்த புராணம் மற்றும் பத்மபுராணங்கள் சாஸ்தாவை யோகேஸ்வரன் என்கின்றன.
அவரை வீரம், கம்பீரம் போன்ற கோலங்களில் அச்சங்கோயில், ஆரியங்காவு கோயில்களில் காணலாம். சபரிமலையில், யோக நிலையில் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் முகமாக உள்ளார். ஏனென்றால், அது மகா யோகபீடம் பகவான் அங்கே தவக்கோலத்தில் இருக்கிறார். அதனால்தான் யோகப்பட்டம் அவர் காலில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலை ஹரிவராசனம் எனப்படும். அதாவது இரண்டு கால்களும் பின்புறமும் நிலத்தில் அழுந்தியிருக்க, முதுகு எலும்பை நேராக நிலை நிலை நிறுத்தி அமர்ந்திருக்கிறார் ஐயப்பன். இந்த யோக நிலையில் உடலை நிறுத்துவதற்கு யோகப்பட்டம் பயன்படுகிறது.
மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில்
தரிசிக்கலாம். இந்த திருக்கோலத்தில், சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மற்றொரு கால் மடித்தப்படியும் இருக்கும். மடித்த காலையும் இடுப்பையும் சர்த்து கட்டப் பட்டிருக்கும் பட்டம் வீரப் பட்டம் எனப்படும்.
Image may contain: 1 person, indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...