நீண்ட நேரம் கெடாமல் இருக்கும் சட்னியை எப்படிச் செய்வது?
1 .உப்பு ,புளி ,வரமிளகாய் ,வெங்காயம் எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி, தண்ணீர் விடாமல் அரைக்க, நீண்ட நேரம் தாங்கும்.
2 .எந்த சட்னியாக இருந்தாலும் அரைத்த பின் எண்ணெய் விட்டு வதக்கி வைத்தால் கெட்டுப் போகாது.
3 .தேங்காய் சட்னி அரைப்பதற்கு முன், வெறும் சட்டியில் தேங்காயை எண்ணெய் விடாமல் வதக்கிக் கொள்ளவும். பின்னர் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். வெளியூர் பயணங்களுக்கு கூட கொண்டு செல்லலாம் இப்படி அரைத்தால்...
4. சட்னி செய்யும் பொருட்களை எண்ணெயில சுருள வதக்கணும். இல்லேன்னா இட்லித் தட்டுல வச்சி (கிண்ணத்துல)ஒரு ஆவி காட்டினா டேஸ்ட் மாறாது ,கெட்டும் போகாது.
No comments:
Post a Comment