Thursday, December 5, 2019

பல கிரக சேர்க்கை குறித்த விளக்கம்:

டிசம்பர் மாதம் என்றாலே நம்மவர்களுக்கு ஒரு கிலி ஏற்படுவது ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாகிவிட்டது...காரணம் இல்லாமல் இல்லை... ஏதேனும் ஒரு இயற்கை பேரழிவு இந்த மாதத்தில் வந்து விடுகிறது....
இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் 25 முதல் 27 வரை ஆறு கிரகங்கள் தனுசுவில் கூடுகின்றன.... அதுவும் சந்திரன் தனுசுவிற்கு வரும் போது கிரகணம் ஏற்படும்....அன்றைய தினம் அது நடக்க போகிறது இது நடக்க போகிறது பலரும் பல விதமாக கருத்து கூறி வருகிறார்கள்....ஆயினும் நாட்கள் குறைவாக உள்ளதால் அந்த தலைப்பை தொடலாம் என்று தோன்றியது....
பொதுவாக இது போன்ற பல கிரகங்கள் ஓர் இடத்தில் கூடும் போது அங்கே கிரக யுத்தம் அல்லது கிரக போட்டி என்பது ஏற்படும்.... வீட்டிற்கு உட்பட்டே கிரகங்கள் செயல் பட வேண்டும் என்பதெல்லாம் செல்லுபடியாகாது...சில நேரங்களில் அந்த பாவகத்தை ஏதேனும் ஒரு தீய கிரகம் கெடுத்து விடும் வாய்ப்புகள் உள்ளன... பல சக்திகளின் கலவை என்பது ஒரு வித்தியாசமான முறையில் செயல் படும்....
நவகிரகங்களில் முழுமையாக துன்பங்களை தர வல்லவர் சனி.... முழு நல்லவைகளை தருபவர் குரு..அஷ்டவர்க பலன்களில் இருவரும் நல்ல புள்ளிகளை பெற்றுள்ளனர்..அதாவது சனி அஷ்டவர்கத்தில் 4 புள்ளிகளை பெற்றுள்ளார்...குரு 5 புள்ளிகளை பெற்றுள்ளார்..சராசரிக்கு மேலாக ஒரு கிரகம் அஷ்டவர்கத்தில் புள்ளிகள் பெற்றுவிட்டால் அந்த கிரகம் நல்லது செய்யும் என்பது விதி..அந்த அடிப்படையில் சனி கெடுதல் செய்ய மாட்டார்...
ஆயினும் இந்த சேர்க்கையின் தாக்கம் மூன்று நாளில் முடியும் விஷயம் அல்ல.. ஒரு சம்பவத்திற்கு போடப்படும் அடித்தளமே கோச்சார கிரகங்களின் சஞ்சாரம் ஆகும்...மூல நட்சத்திரத்தில் சூரிய சந்திர புதன் ஆகியோர் கூடி இருப்பார்கள்...அவரவர் ராசி லக்கினங்களுக்கு ஏற்ப நிகழ்வுகள் எதிர்காலத்தில் இருக்கும்.... சனி மகரத்தில் செல்லும் போது அஷ்டவர்க பலன்கள் மிக குறைவாக இருக்கும் என்பதால் அப்போதைய கால கட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றை உலகம் எதிர்கொள்ளும்...எனவே அந்த மூன்று நாட்களில் பெரிதாக எதுவும் ஏற்பட வாய்ப்பு குறைவு...ஏனெனில் குருவின் வீடாகி குருவே அங்கு அமர்ந்து உடன் சுக்கிரன் போன்றோர் இருப்பதால் அதீத தொல்லைகள் வரும் வாய்ப்புகள் குறைவு..சனியும் தொல்லைகள் செய்யாத அளவுக்கு அஷ்டவர்க புள்ளிகள் பெற்றுள்ளார்....
ஆயினும் விதைத்தல் மற்றும் சிதைத்தல் கூடாது..அதாவது புதிய விஷயங்களை தொடங்கவோ அல்லது இருப்பவற்றை சிதைக்கவோ வேண்டாம்...
கோச்சாரத்தில் சனி~ராகு, செவ்வாய்~ராகு, செவ்வாய்~சனி ஆகிய சேர்க்கை தான் அதிக கவனத்துடன் பார்க்க வேண்டும்....
தனிப்பட்ட முறையில் ரிஷப ராசி அன்பர்கள் குறிப்பிட்ட தினத்தில் சூரிய கிரகணத்துடன் கூடிய சந்திராஷ்டமம் ஏற்பட்டு ரிஷப நாதன் சுக்கிரனும் 8ல் மறைந்து வலு குறைவோடு இருப்பதால் அந்த தினங்களில் சற்று கூடுதல் கவனத்தோடு செயல் பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
நமக்கு எத்துணை துன்பம் நேரினும் நம்மை காக்க ஆண்டவன் நிச்சயம் தயங்க மாட்டார்.... அவர் அருளுடன் அந்த நாட்களையும் வெற்றியோடு அனைவரும் கடந்து விடுவோம்...
.....நன்றி.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...