Wednesday, December 4, 2019

மகர சங்கராந்தியன்று #ஐயப்பன் எவ்வாறு காட்சித் தருகிறார்?

💫 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். அவ்வாறு மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு மகர சங்கராந்தியன்று ஐயப்பன் எவ்வாறு காட்சித் தருகிறார்? என்பதைப் பற்றி பார்ப்போம்.
💫 என்றுமே தவம் புரிகின்ற கோலத்தில் கருவறையில் தன் பக்தர்களுக்கு காட்சி தருகின்ற ஐயப்பன், மகர சங்கராந்தியன்று மட்டும் திருவாபரணங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை அணிந்து கோலாகலமாகக் காட்சி அளிப்பார்.
💫 பந்தள ராஜாவின் அரண்மனையில் இருந்து ஆபரணங்கள் மிகவும் பாதுகாப்பாக வரும். யோக நிலையில் இருக்கின்ற சுவாமி ஐயப்பன், பந்தள நாட்டில் தனக்கு குருவாக இருந்தவருக்கு கொடுத்த வாக்குப்படி இந்த ஆபரணங்கள் அணிந்து காட்சி தருவதாகச் சொல்லப்படுகிறது.
💫 மகர சங்கராந்தியன்று மாலை ஆறு மணிக்கு மேல் சன்னிதானத்துக்கு எதிரில் உள்ள காந்தமலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சி தருவார். 'மகர ஜோதி" என்று அழைக்கப்படும் இந்த ஜோதி தரிசனத்தை ஐயப்பன் சன்னிதானம், பாண்டித்தாவாளம், புல்மேடு, சரங்குத்தி, நீலிமலை, மரக்கூடம், மலையுச்சி, சாலக்காயம், அட்டத்தோடு ஆகிய ஒன்பது இடங்களில் இருந்து தரிசிக்கலாம்.
💫 சபரிமலைக்கு செல்வதில் முன்பிருந்த சங்கடங்கள் இப்போது இல்லை. உணவுக் கடைகள், தங்கும் வசதிகள், மருத்துவ வசதிகள், தரிசனத்துக்கான நேரத்தை இணையத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுதல், கஷ்டப்படுத்தாத சாலை வசதி என்று எல்லா வசதிகளும் உண்டு என்றாலும், இன்றைக்கும் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து, கடுமையான புலனடக்கம் மேற்கொண்டு, வழிபாட்டுமுறைகளை மேற்கொள்பவர்களும் இருக்கின்றார்கள்.
💫 எனவே, முறையான விரதத்தைப் பின்பற்றும் பக்தர்களுக்கு சபரிமலை ஐயப்பன் வேண்டுவனவற்றை அருளி வருகின்றார். மனம் நிறைய பக்தியோடு சபரிமலை செல்லுங்கள். ஐயப்பன் அருள் நிச்சயமாக கிடைக்கும். வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...