அந்த போராட்டத்தைக் கலவரம் ஆக்கியது , வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியது , வாகனங்களை அடித்து நொறுக்கியது எல்லாம் மக்களா செய்வார்கள்? நான் 60க்கும் மேற்பட்ட போராட்டங்களுக்குச் சென்றவன். சமூக விரோத கும்பல் எப்போதுமே இங்கே உண்டு அது இப்படி போராட்டத்தை அரசுக்கும் ஆட்சிகளுக்கும் எதிராக மாற்றக் கலவரமாக மாற்றத் துடிக்கும் கூட்டம் எனவே சம்மன் உண்மையில் பாரதி ராஜா முதல் அமீர் வரை இருக்கும் நபர்களுக்குத் தான் அனுப்பவேண்டும்! அந்த நாள் வரை மக்களைத் தூண்டிவிட்ட இந்த கூட்டம் எப்படி திடீரென்று அன்று மட்டும் பதுங்கினார்கள்!
எனவே ரஜினி அவர்களுக்குச் சம்மன் அனுப்பக் காரணம் அதிமுக செய்யும் அரசியல் தானே ஒழிய வேறு இல்லை.
அப்படியே இருந்தாலும் ரஜினி என்ன சொன்னார்? அது தானே உண்மை என்று ஆனது.
சாதாரண மக்கள் கலவரம் செய்வதோ வீடுகளை பஸ் வாகனங்களைத் தீயிட்டுக் கொழுத்த மாட்டார்கள், அவர்கள் அமைதியாகத் தான் போராட்டம் நடத்தினர் அதில் தீய சக்திகள் ஊடுருவி கலவரம் செய்தனவே அன்றி மக்கள் அல்ல என்று சொன்னார் அதானே விசாரணையில் உண்மையானது.
எனவே சம்மன் வெக்ககேடாது... உண்மையில் அன்றுவரை போட்டாத்திற்கு மக்களைத் தூண்டிவிட்ட சில தலைவர்கள் அன்று மட்டும் போராட்டத்திற்குப் போகாமல் பதுங்கியது தான் பெரும் மர்மம். அவர்களைத் தான் பிடித்து விசாரணை செய்ய வேண்டும். கூடுதலாக அன்று வரை போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைக்குப் போகாமல் நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்த யார் ஆணையிட்டது என்ற விவரமும் வெளியிடாத நிலையில்
அதிமுக அரசு செய்வது மிகவும் கீழ்த்தரமான அரசியல்.
அருணா ஜெகதீசன் கமிஷன் அதிமுக அரசு சொல்வதை எழுதப் போகிறார்கள், செய்யப் போகிறார் என்பது ஊர் அறிந்த ரகசியம் - நிச்சயம் அதிமுக அரசு சொல்லியே தான் சம்மன் அனுப்புகிறார் என்று நினைக்கிறேன்.
அதிமுக திமுக இணைந்தே கூட இதனை செய்ய வாய்ப்புண்டு. ரஜினி அவர்களை எதிர்க்க இவர்கள் நிச்சயம் மறைமுக கூட்டு வைத்துக் கொள்வர்.
ரஜினி அவர்களுடன் மக்கள் நாங்கள் உள்ளோம்.
No comments:
Post a Comment