Tuesday, February 4, 2020

பாவம் போக்கிடும் புனித கங்கை.

"என்னடா சுப்பு கொஞ்ச நாளா பொட்டிப்பாம்பா அடங்கியிருக்கே?"
"நா பாம்பில்லை. ஆம்பிளை சிங்கமாயிருந்தாலும் உன்கிட்டே அடங்கிதானே இருக்கணும் மீனு. இல்லேன்னா எனக்கு போஜனம் கிடைக்காதே."
"நடிகர் திலகம்டா நீ சுப்பு! என்கிட்டே அடக்கஒடுக்கமா இருக்கிறா மாதிரி ஊருக்கே படம் காட்டியிருக்கே. நீ எப்பேர்ப்பட்ட தில்லாலங்கடின்னு எனக்குத்தானே தெரியும். சரி..சரி... ஏதோ ரொம்ப யோசனையில இருக்காப்ல தெரியறதே"
"இந்தப் பாவம் புண்ணியம் பத்தியெல்லாம் நீ என்ன நினைக்கிறே மீனு?"
"நா எது பண்ணினாலும் புண்ணியம்... நீ எது செஞ்சாலும் பாவம்"
"சீரியஸா கேட்கறேன். வெளையாடாதே மீனு"
"பாவம் புண்ணியம் ரெண்டுமே ரெண்டு கணக்கு. பாவக் கணக்கையும் புண்ணியக் கணக்கையும் டாலி பண்ண முடியாது. அம்பது புண்ணியம் மைனஸ் அம்பது பாவம்னா... உன் கணக்குல அம்பது புண்ணியம் வரவுல இருக்குன்னு நினைச்சுக்கமுடியாது"
"அதெல்லாம் தெரியும்... சமீபத்துல ஒரு கதை படிச்சேன். பச்சுன்னு ஒட்டிக்கிச்சு"
"சொல்லு... அதான் முழுச்சிண்டே உட்கார்ந்திருந்தியா?"
"பார்வதியும் பரமேஸ்வரனும் கங்கைக்கு மேலே ஆகாயத்துல போயிண்டிருக்கா... இவ்ளோ பேர் ஸ்நானம் பண்ணினா கங்கை பாவத்தைக் கழுவிடுவான்னு நம்பறாளான்னா பார்வதி... உடனே பரமேஸ்வரன் இரு காட்றேன்ன்னார்... அப்போ நூறு வயசுக்குமேலே உள்ள தம்பதி ரெண்டு பேர் கங்கையில ஸ்நானம் பண்ண இறங்கறா..."
"ரெண்டு பேரும் அப்டியே போய்ட்டாளா?"
"இப்டி குறுக்க கேள்வி கேட்காம கேளு மீனு. முடிவு ரொம்ப டச்சிங்"
"சரி.. சொல்லு.. நான் வாயைப் பொத்திக்கறேன்"
"அந்தக் கிழவரை கங்கை இழுத்து அடிச்சிண்டுப் போறது... கிழவி அந்தப் பக்கமாப் போறவாளையெல்லாம் உதவிக்குக் கூப்பிடறா... கங்கையில் குதிச்சுக் காப்பாத்தணும்னு ரெண்டு மூனு பேரு கரைக்குப் பக்கத்துல வரும்போது.. கிழவி... 'இதுவரைக்கும் பாவமே பண்ணாதவங்களா இருந்தா அவரைத் தொட்டுத் தூக்கலாம்'ம்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டா.. காப்பாத்த முயற்சி பண்ணலாம்னு கங்கையில இறங்கினவனெல்லாம் நின்னுட்டான்"
"அச்சச்சோ... இதென்னடா கூத்தாப்போச்சு?"
"அப்போ அந்தப் பக்கமா ஒரு குடிகாரன் வரான். அப்போதான் பொதுமகள் வீட்டுக்குப் போயிட்டு ஜல்சா பண்ணிட்டு... பல்லு கூட தேய்க்காம.. வாய் நிறையா புகையிலையைப் போட்டுண்டு...வந்துண்டிருக்கான்... அந்தக் கிழவி மறுபடியும் கத்தறா 'ஐயோ! இந்தக் கூட்டத்துல ஒரு பாவம் கூட பண்ணாதவன் யாருமில்லையா என்னோட புருஷனைக் காப்பாத்த'ன்னு... அந்த குடிகாரப் பய என்ன பண்ணினான்னா அப்படியே தொப்புன்னு கங்கையில குதிச்சான்... அந்தக் கிழவரோட சட்டையைப் பிடிச்சு இழுத்துக் கொண்டுவந்து கரையில போட்டுட்டான்..."
"நெனைச்சேன்...இப்படித்தான் இருக்கும்ணு"
"இதையேன் அங்க இருந்த பய ஒருத்தணும் செய்யலைன்னு தெரியுமா மீனு"
"டேய் சுப்பு. முழுகினா பாவத்தைக் கழுவுறதுதான் கங்கையோட புனிதமே... அவரைக் காப்பாத்த நினைச்ச குடிகாரன் கங்கையில முழுகினா இதுவரை பண்ணின பாவமெல்லாம் தீர்ந்துடும்னு நம்பினான்... குதிச்சான்... காப்பாத்திட்டான்... வேடிக்கைப் பார்த்த பயலுங்க முன்னாடி பாவத்தை நீக்கும் கங்கை ஓடியும் மனசார நம்பலை... அவ்ளோதான்... சிம்பிள் லாஜிக்"
"நீ க்ரேட் மீனு"
"அற்புதமான கதைடா! சுப்பு இதைப் படிச்சாலே பாவம் தொலைஞ்சுடும் போல்ருக்கே"
"பண்ணின பாவம் தொலைஞ்சுடும்... தாலி கட்டின பாவம் ஒண்ணு இருக்கே... அது தொலையுமா?"
"எடுடா கட்டைய... படவா...ரொம்ப பேசறே"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...