பேரம் பேசி வாங்கி வந்த ஒரு கிலோ தக்காளியில், ஒன்றிரண்டு அழுகிப் போக......
வேண்டாம் என்று அதை புழக்கடையில் வீசி எறிய.........
பத்து நாட்களுக்குப் பிறகு எதேச்சையாக அந்தப் பக்கம் போனபோது பச்சைபசேலென முளைத்த குறுத்து கண்களில் பட.....
இது என்ன பெரிதாக தளிர்த்து விடப்போகிறது என்று நான் நகர்ந்துவிட.....
அழுகிய தக்காளியில் இருந்து விழுந்த விதைகளும்,
மண்ணிலிருந்த ஈரத்தன்மை, இவை இரண்டும் சங்கமிக்க.......
மண்ணிலிருந்த ஈரத்தன்மை, இவை இரண்டும் சங்கமிக்க.......
இந்த நிகழ்விற்கு வானம் அவ்வப்போது (மழையாய்) நீர் இறைக்க......
விழுந்த நீரின் வேகம் தாளாமல் மேலெழுந்த மண்புழுக்கள் குறுக்கும், நெடுக்குமாக நகர்ந்து அதற்கு பிராணம் கொடுக்க.......
கதிரவன் ஒளி சேர்க்க......
இரண்டு மாதம் கழித்து அந்த செடியில் பூத்துக் காய்த்து தக்காளி என் கண்களை உறுத்த.......
இரண்டு மாதம் கழித்து அந்த செடியில் பூத்துக் காய்த்து தக்காளி என் கண்களை உறுத்த.......
அவை கணிவதற்குள் பறித்துவந்து கூடையில் அடுக்கி விட்டேன்.........
விழவேண்டும், விழுந்தாலும்,,,,,,,,
வித்தாக எழ வேண்டும் என்பதை இயற்கை அனுதினமும் தானியங்கி, நமக்கு ஒன்றை உணர்த்திக்கொண்டே தான் இருக்கிறது........
வித்தாக எழ வேண்டும் என்பதை இயற்கை அனுதினமும் தானியங்கி, நமக்கு ஒன்றை உணர்த்திக்கொண்டே தான் இருக்கிறது........
"முயன்றால் ,,, முடியுமென்று.......🌷
வேண்டாம் என்று நான் வீசிய அழுகிய தக்காளி என்னைப் பார்த்துச் சொன்னது..................
வீழ்வேன் என நினைத்தாயோ.........!!!!🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹
No comments:
Post a Comment