Wednesday, February 5, 2020

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா துளிகள்.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா துளிகள்
ராஜகோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றிய காட்சி மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்த காட்சி.



















* குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதற்காக 9 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பப்பட்டன.

* கோவில் வளாகத்தில் 300 அடி உயர ஏணிப்படிகளுடன் கூடிய அதிநவீன தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. சிவகங்கை பூங்கா வளாகத்தில் தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருந்தனர்.

* பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் கோவிந்தராவ், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. அமல்ராஜ், டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து ரோந்து வந்து கண்காணித்தபடி இருந்தனர்.

* பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள், மிகவும் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் உடைமைகளும் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

* தஞ்சை மாநகரில் முக்கிய சாலைகள், பழைய பஸ்நிலைய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மதியத்துக்குப்பிறகு கடைகள் திறக்கப்பட்டன.

* கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் அலங்கார தோரணங்களும் அமைக்கப்பட்டு இருந்தது.

* குடமுழுக்கை சாலைகளில் நிற்கும் பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 10 இடங்களில் எல்.இ.டி. திரைகளும் அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டன.

* கடும் பனியையும் பொருட்படுத்தாது பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே வரத்தொடங்கினர். அதிகாலை 4 மணிக்கு பின்னர் அதிக அளவில் வந்து குவியத்தொடங்கினர்.

* பொதுமக்களின் வசதிக்காக தஞ்சை-பட்டுக்கோட்டை சாலை மற்றும் புதிய பஸ் நிலையத்திற்கு பின்புறம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.

* கார், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், குந்தவை நாச்சியார் கல்லூரி அருகே ஐ.டி.ஐ மைதானம், பி.எஸ்.என்.எல். மைதானம், கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, குட்ஷெட் சாலை உள்பட 21 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது.

* வெளியூரில் இருந்து பக்தர்கள் எளிதில் கோவிலுக்கு செல்லும் வகையில் ஆங்காங்கே வழிகாட்டு பலகைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

* தஞ்சை மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

* பொதுமக்கள் தகவல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ‘நம்ம தஞ்சை’ என்ற செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

* பொதுமக்கள் ஆங்காங்கே சாலைஓரங்கள் மற்றும் அகழி, ராஜராஜசோழன் சிலை பகுதிகளில் நின்று பார்க்கும் வகையில் தடுப்புக்கம்பிகளும் அமைக்கப்பட்டு இருந்தது.

* பெரியகோவில், யாகசாலை பூஜை, அனைத்து கோபுரங்கள், சன்னதிகள், பக்தர்கள் செல்லும் வழித்தடங்கள் என 192 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை போலீசார் பெரியகோவில் எதிரே அமைக்கப்பட்டு இருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்தனர்.

* போலீஸ் சார்பில் 17 உதவி மையங்கள், 55 தகவல் அறியும் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு லோகோவும் வெளியிடப்பட்டது.

* தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து பக்தர்களை கோவிலின் அருகே வரை அழைத்து வருவதற்காக 175 பள்ளி, கல்லூரி வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன.

* கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 225 சிறப்பு பஸ்களும், ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன.

* மாற்றுத்திறனாளிகளுக்காக 130 இருசக்கர நாற்காலிகள் பெரியகோவில் அருகே தயார் நிலையில் வைக்கப்பட்டு இயக்கப்பட்டன.

* மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் தனியார் மருத்துவமனைகள், அமைப்புகள் சார்பில் 37 இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு இருந்தன. 20 ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

* மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கு உதவிடும் வகையில் 1,500 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

* பக்தர்கள் செல்லும் பாதை, பெரியகோவில் வளாகம், தற்காலிக பஸ் நிலையம், வாகனம் நிறுத்துமிடங்களில் 1000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 225 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த தொட்டிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

* மாநகராட்சி சார்பில் 238 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை மாநகரை சுற்றிலும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றும் வகையில் 800 இடங்களில் குப்பைத்தொட்டிகளும் வைக்கப்பட்டு 25 லாரிகள் மூலம் குப்பைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

* சுகாதாரப்பணியில் தஞ்சை மாநகராட்சி, திருச்சி மாநகராட்சி மற்றும் பல்வேறு நகராட்சிகளில் இருந்து துப்புரவு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 1,500 பேர் வரவழைக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர்.

* பக்தர்களை வரவேற்கும் வகையில் ரவுண்டானா, முக்கிய சாலை சந்திப்பு இடங்கள் என மொத்தம் 10 இடங்களில் ராஜா, ராணி உருவத்துடன் பிரம்மாண்டமான தலையாட்டி பொம்மைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...