அமைச்சர்களின் பினாமியாக அன்புச்செழியன் செயல்பட்டு வருகிறாரா என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சினிமா வட்டாரங்களில் மதுரை அன்பு என்றால் பிரபலம். ராமநாதபுரம் மாவட்டம் பம்மனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அன்புச்செழியன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். 1990களில் சொந்த ஊரில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த அவர் குடும்பத்துடன் மதுரைக்கு இடம் பெயர்ந்தார்.
மதுரையிலும் வட்டித் தொழிலில் கொடி கட்டிப் பறந்தார். 2001ல் அன்புச்செழியனுக்கு சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனின் நட்பு கிடைத்தது. அதை அன்புச்செழியன் நன்றாக பயன்படுத்தினார். மதுரை மாநகர் மாவட்ட இளைஞரணி துணை செயலரானார். இதனால் மதுரை மாவட்ட அ.தி.மு.க. வினர் அன்புச்செழியன் விரித்த வலைக்குள் விழுந்தனர். அவர்களுக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். பின் சென்னைக்கு வந்த அன்புச்செழியன் சினிமா வட்டாரங்களில் திடீர் பணத் தேவை அதிகம் என்பதை அறிந்தார். அதனால் சினிமா பைனான்சியராக உருவெடுத்தார்.
படப்பிடிப்புக்கு பணத் தேவை உள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகையர்கள் குறித்து நண்பர்கள் வாயிலாக தகவல் அறிந்து அவர்களை தொடர்பு கொள்வார். அவர்களிடம் பேசி அவர்கள் கேட்கும் தொகையை வீடுகளுக்கே அனுப்பி வைப்பார். அன்புச்செழியனை தொடர்பு கொண்டால் உடனடியாக எத்தனை கோடி வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார். சொன்ன தேதியில் வட்டியும் முதலுமாக கொடுத்துவிட வேண்டும். இல்லை என்றால் அன்புச்செழியன் அந்த பணத்தை வசூலிக்கும் முறையே தனி என விபரம் அறிந்தோர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2001ம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் சகோதரரும், தயாரிப்பாளருமான ஜி.வெங்க டேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அன்புச்செழியன் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின் தான் அன்புச்செழியன் யார் என பரவலாக எல்லாருக்கும் தெரியத் துவங்கியது. அவர் 'கோபுரம் பிலிம்ஸ்' என்ற நிறுவனத்தை துவக்கி படங்களையும் தயாரித்து வந்தார்.
அன்புச்செழியனிடம் நடிகை ரம்பா வட்டிக்கு வாங்கிய பணத்திற்காக மிரட்டப்பட்டுள்ளார். அதுபற்றி ரம்பாவே வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். வட்டியை வசூலிக்க நடிகை தேவயானியை மதுரைக்கு கடத்திச் சென்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல் வதந்தி என தேவயானியே மறுத்து விட்டார். மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடித்த 'சுந்தரா டிராவல்ஸ்' பட தயாரிப்பாளர் தங்கராசுவை மிரட்டியதாக 2004ல் அன்புச்செழியன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். 2017ல் சென்னை வளசரவாக்கத்தில் நடிகரும், இயக்குனருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் அன்புச்செழியனின் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக அன்புச்செழியன் மற்றும் அவரது மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது மேலாளர் முருகன் மட்டும் கைது செய்யப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்த அன்புச்செழியன் கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
அன்புச்செழியனின் பின்னணியில் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் பினாமியாக அன்புச்செழியன் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்தும் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment