Thursday, February 6, 2020

தவறை தவறுதான்னு சொல்லிப் பழகுங்க.

முதுமை வேற அதிகாரத் திமிரு வேற
தன்னோட செருப்பை கழட்ட முடியாத அளவுக்கு தன் உடல்நிலை இருந்தா கூடவே ஒரு உதவியாளரை வச்சிக்கனும். இல்லைனா தன் சொந்த பேரனையே கூட எப்பவும் வச்சிக்கனும்.

இதைப்பண்ணாம எதேச்சையாதான் அந்த பையனை கூப்பிட்டு செருப்பை கழட்டிவிட சொன்னேன்னு சொல்றதோ, பேரன் மாதிரி நினைச்சி கூப்பிட்டு செருப்பை கழட்டிவிட சொன்னேன்னு சொல்றதோ வெறும் சமாளிப்பாதான் இருக்குமேதவிர உண்மையா இருக்காது.
அந்த இடத்துல வேறொரு அமைச்சரோட பேரனோ, கலெக்டரோட மகனா இருந்தா அவனை கூப்பிட்டு செருப்பை கழட்டிவிடுன்னு சொல்லியிருப்பாரா?
நிச்சயமா அதுக்கு வாய்ப்பே இல்லை. பின்ன ஏன் இந்த பையனை மட்டும் தேடிப்பார்த்து 'நீ வா'ன்னு கூப்பிட முடிஞ்சிது?
காரணம் அது ஏதோ ஒரு சாதாரண வீட்டு பிள்ளை.
இந்த தேடல்தான் ஆதிக்கத் திமிர். இதெல்லாம் ஒரே நாள்ல வராது காலம்காலமா கூடவே இருந்திருக்கும்.
தான் செய்வதை தவறுன்னே தெரியாம இத்தனை நாளா வாழ்ந்ததோட சாட்சிதான் இன்னைக்கு நடந்தது.
'எனக்கு உடம்பு முடியலைப்பா. யாராவது என்னோட செருப்பை கொஞ்சம் கழட்டி விடுறீங்களாப்பா?' னு அவர் பொதுவில் கேட்டு அந்த சிறுவன் வந்து கழட்டி விட்டிருந்தா அது உதவி. தாத்தா - பேரன் உறவு மாதிரி நினைச்சிக்கலாம். மத்தபடி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அந்த சிறுவனை நேரில் அழைத்து அவர் மன்னிப்பு கேட்கனும். அதோட அந்த பேரனுக்கு அவர் எதாவது உதவி செய்து தன் தாத்தா பாசத்தை காட்டட்டும்.
வெறும் காலோட வெய்யில்லயும், கல்லு முள்ளுலயும் பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் வர்ரதை பார்த்து அவுங்களுக்கு பள்ளிக்கூடத்துலயே இலவசமா செருப்பு கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.
தன் தலைவர் கொண்டுவந்த திட்டத்தை மேம்படுத்தி செருப்புக்கு பதிலா 'ஷூ' கொடுக்க உத்தரவு போட்டவர் அம்மா. அவுங்க பேரை சொல்லி நடக்கும் ஆட்சியில் அமைச்சரா இருந்துட்டு இதுபோல சில்லரைத்தனத்தை செய்யுறது அவுங்களை அவமதிப்பதற்கு சமம்.
இனியாவது நல்ல புத்தியோட நடக்கப் பாருங்க.

திண்டுக்கல் சீனிவாசன்
தலைமையால் கண்டிக்கப்பட வேண்டும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...