வங்கிகளில் பணம் பெறும்போது சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ ,வாடிக்கையாளருக்கு கள்ள நோட்டு கொடுக்கப்பட்டு விடுகின்றது.
ஆயிரக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடக்கும் போது ,இந்த கள்ள நோட்டுகளை ,வாடிக்கை யாளர்கள் , உடனடி யாக அடையாளம் காண்ப தென்பது அவ்வளவு சுலபமில்லை.
சில வியாபார நிறுவனங்கள் ,தாங்கள் விற்பனை செய்யும் பொருளின் எடை சரியானதுதான் என்பதற் கும் ,தங்கள் நிறுவனத்தின் கண்ணியமான வியாபார த்தை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும் வகையில் ,எடை குறித்து சந்தேகம் வரும் சமயம் ,வாடிக்கை யாளர்கள் ,தாங்கள் வாங்கும் பொருளின் எடையை , வாடிக்கையாளரே சரிபார்க்கும் வகையில் ,பிரத்யேக மாக, எடை பார்க்கும் கருவி ஒன்றை வாடிக்கையா ளரின் பயன்பாட்டிற்காக ,வைத்திருப்பார்கள்.
வாடிக்கையாளர்கள் ,தாங்கள் வாங்கும் பொருளின் எடை சரியான அளவுதான் என்பதை தாங்களே ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள, இந்த அமைப்பு வசதியாக இருக்கும்.
அதே போல் ,ஒவ்வொரு வங்கியும் , பண பரிவர்த்தனை நடக்குமிடத்தில் ரூபாய் நோட்டின் தன்மையை அறிய ,கள்ள நோட்டை அடையாளம் காணும் இயந்திரம் ஒன்றினை ,வைத்திட வேண்டும்.
இது மிகவும் அவசியமான ஒன்று.
வங்கிக்கு உள்ளேயே ,வாடிக்கையாளர் , காசாளரிடம் பெறுகின்ற ரூபாய் நோட்டினை தாங்களே தரம் அறிய வசதியாக இருக்கும்.
இந்த ஏற்பாட்டினை , உடனடியாக அனைத்து வங்கிகளும் செய்திடவேண்டுமென்பது வேண்டுகோள் .
திருச்சியில் ஒரு வங்கியில் ,பணம் பெறும் போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இக்கோரிக்கை .
No comments:
Post a Comment