வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என திமுக தலைவர் ஸ்டாலின் உளறிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் அதிமுக வெளியிட்டு கிண்டல் செய்துள்ளது.
முதல்வர் பழனிசாமி சமீபத்தில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும், அதற்காக சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்திருந்தார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், சென்னையில் நடந்த திமுக நிர்வாகியின் திருமண விழாவில், 'டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என்ற சராசரி அறிவு கூட முதல்வர் பழனிசாமிக்கு இல்லை' என பேசினார்.

அவ்வாறு ஸ்டாலின் பேசும்போது, வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என மாற்றி சொல்லியிருந்தார். அதனை கிண்டல் செய்துள்ள அதிமுக, அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிறார் திமுக தலைவர். ஒருவேளை வேளாண் மண்டலத்தை அழித்து பொருளாதார மண்டலம் ஆக்குவதற்காக மீத்தேன் எடுக்க தான் போட்ட கையெழுத்து மனதிற்குள் நினைவில் வந்து விட்டதோ என்னவோ?' என கிண்டலாக பதிவிட்டுள்ளது.
அவரது பதிவு:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிறார் திமுகவின் தலைவர்.
ஒருவேளை வேளாண் மண்டலத்தை அழித்து பொருளாதார மண்டலம் ஆக்குவதற்காக மீத்தேன் எடுக்க தான் போட்ட கையெழுத்து மனதிற்குள் நினைவில் வந்து விட்டதோ என்னவோ?
No comments:
Post a Comment