- அடிதடி வழக்கிலிருந்து பெண்ணை விடுவிக்க 5,000 லஞ்சம் வாங்கிய பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
- ஏற்கெனவே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய நிலையில் மேலும் பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினரிடம் ஆய்வாளர் மீது புகார் அளித்ததன் காரணமாக இந்தக் கைது நடந்தேறியுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ளது பார்த்திபனூர். இங்குள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜராஜன்.
- `அடாவடி அதிகாரி' எனப் பெயர்பெற்ற இவர் கூலித் தொழிலாளிகள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டிக்காரர்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் மாமூல் வாங்குவதையே வழக்கமாகக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
- இந்த நிலையில், பார்த்திபனூர் இடையத்தூர் மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பூமிநாதனின் மனைவி ஹேமலதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த ஜனவரி 20-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.
- இதுதொடர்பாக பார்த்திபனூர் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர்.
- இந்த வழக்கிலிருந்து ஒரு பெண்ணை விடுவிப்பதற்காக காவல் ஆய்வாளர் ராஜராஜன் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
- அந்தப் பெண் ரூ.5,000 லஞ்சமாகக் கொடுத்திருந்த நிலையில், மீதிப் பணத்தையும் கேட்டு நச்சரித்துள்ளார்.
- இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் (தற்போது பயிற்சிக்காக சென்றுள்ளார்) பிரத்யேகமாக மாவட்ட பொதுமக்களுக்கு அளித்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
- போலீஸார் கொடுத்த ஆலோசனையின்படி, பார்த்திபனூர் ஆய்வாளர் ராஜராஜன் மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் தங்கவேலு என்பவர் புகாரளித்தார்.
- ஆய்வாளர் ராஜராஜனைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ரசாயனப் பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை ஜனவரி 30-ம் தேதி காலை தங்கவேலுவிடம் கொடுத்து, ராஜராஜனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
- ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ராஜராஜன் பெற்றுக் கொண்டவுடன், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி உன்னி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், சந்திரன் ஆகியோர் காவல் ஆய்வாளர் ராஜராஜனைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
- இதையடுத்து, ஆய்வாளர் ராஜராஜனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினரால் ராஜராஜன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஆர்வலரான செல்வராஜ், பார்த்திபனூர் காவல் நிலையம் முன்பாக சூடமேற்றி தேங்காய் உடைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, February 12, 2020
`லஞ்சம் வாங்கிக் கைதான காவல் ஆய்வாளர்!' -சூடமேற்றி தேங்காய் உடைத்த சமூக ஆர்வலர்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment