Wednesday, February 5, 2020

தேர்தல் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள்!
பத்தாயிரம் பேர் தேவை!
பிரசாந்த் கிஷோரின் IPAC நிறுவனம் அறிவிப்பு!
தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்!
*****************************************
ஐபாக் நிறுவனம் தேர்தல் வியூகம் வகுத்தல்
உள்ளிட்ட தேர்தல் பணிகளைச் செய்யும் நிறுவனம்.
இது பிரசாந்த் கிஷோரின் நிறுவனம்.
2021 சட்ட மன்றத் தேர்தலை ஒட்டி திமுகவின் தேர்தல்
வியூகம் வகுக்கும் பொறுப்பை பிரசாந்த் கிஷோர்
மேற்கொண்டுள்ளார். (இவரின் IQ = 103.6).
பத்தாயிரம் பேர் வேலைக்குத் தேவைப் படுகிறார்கள்.
தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Resume தயாரித்து ஆன் லைனில் விண்ணப்பிக்கவும்.
TNPSC போல இதில் ஊழல் எதுவும் கிடையாது.
யாருடைய பரிந்துரையும் செல்லாது. 69 சத இட
ஒதுக்கீடோ, வேறு எந்த விதமான இட ஒதுக்கீடோ
கிடையாது. Merit! Only merit!
தகுதிகள் என்னென்ன?
------------------------------------------
1) தமிழனாக இருக்கக் கூடாது. தமிழரல்லாத வெளி
மாநில இளைஞர்களுக்கே முன்னுரிமை! தமிழ்
கற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சமாக
தமிழ் பேசத் தெரிந்திருந்தால் (spoken English) போதும்.
PSTM ஆட்கள் விண்ணப்பித்தால் செருப்படி விழும்.
2) நாட்டின் தலைசிறந்த பள்ளி கல்லூரிகளில்
படித்தவர்களே விண்ணப்பிக்கும் தகுதி உடையவர்கள்.
அரசுப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளிகளில் படித்தோர்
விண்ணப்பிக்கக் கூடாது.
ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்ட்,
வேளச்சேரியில் மு க ஸ்டாலினின் மகள் நடத்தும்
சன்ஷைன் கான்வென்ட்டில் படித்தவர்கள்
இத்தியாதி ஆட்களே விண்ணப்பிக்கலாம்.
ஸ்டேட் போர்டு சிலபஸில் படித்தவர்கள் விண்ணப்பிக்கக்
கூடாது. CBSE சிலபசில் படித்திருக்க வேண்டும்.
3) மேற்கூறிய தகுதிகள் பிராமணர் உள்ளிட்ட உயர்
சாதியினருக்கே இருக்கும் என்பதால், அவர்கள்
மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். BC, MBC, SC, ST,
SCA, BCM ஆகியோர் தகுதியற்றவர்கள்.
அருள்கூர்ந்து பிரசாந்த் கிஷோரின் வேலைவாய்ப்பு
விளம்பரத்தைப் படித்துப் பாருங்கள். வேலைக்கு
விண்ணப்பிக்கும் எத்தனை பேருக்கு அதற்கு
அர்த்தம் தெரியும் என்று மனச்சாட்சியைத்
தொட்டுச் சொல்லுங்கள்.
4) ஆங்கிலம், இந்தியில் எழுதப் படிக்கவும் சரளமாக
உரையாடவும் தெரிந்திருக்க வேண்டும். தமிழில்
சரளம் எதுவும் தேவையில்லை.
எடுத்த எடுப்பிலேயே ஒரு வாசகம் உள்ளது.
Execute Avant-Garde Campaigns!
இதன் பொருள் என்ன? வாசகர்கள் முயன்று அறிந்து
கொள்ள வேண்டும்.
வேலைக்கு விண்ணப்பிக்கும் எத்தனை பட்டதாரிகளுக்கு
இதன் பொருள் தெரியும்?
ஆக, பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறார்
பிரசாந்த் கிஷோர். ஆனால் ஒரு தமிழனுக்கும்
வேலை கிடைக்காது.
தமிழன் முட்டாள். தமிழனுக்கு என்ன தகுதி
இருக்கிறது வேலை கொடுக்க என்கிறார் கிஷோர்.
மு க ஸ்டாலின் என்ன சொல்லப் போகிறார்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...