Friday, April 3, 2020

இந்தியா முழுவதும் ஏற்றும் கோடிகணக்கான தீபத்திற்கு ஒரு பலன் உண்டு எனநம்புவோம்....

ஔி விளக்கு நமக்குநாமே செய்து கொள்ளும் பரிகாரமே...
இதனை யாரும் கிண்டல் அடித்து மீம்ஸ் போடாதீர்கள்...
நாம் வாழும் பூமி ஆன்மீகபூமி
கோவில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.
அந்த அகல் விளக்கில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன.
அது எப்படி? அறிந்து கொள்வோம்.
அகல்_விளக்கு - #சூரியன்
நெய்_எண்ணெய் - #சந்திரன்
திரி - #புதன்
எரியும்ஜூவாலை - #செவ்வாய்
கீழேவிழும்ஜூவாலையின்_நிழல் - #ராகு
ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - #குரு
ஜூவாலையால் பரவும் வெளிச்சம் - #கேது
திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - #சுக்ரன்
தீபம் அணைந்ததும் அடியில் இருக்கும் கரி - #சனி
இதில் சுக்ரன், ஆசையை குறிப்பதாகும். ஆசையை குறைத்துக் கொண்டால், இன்பம் வந்து சேரும். ஆசை தான் நம்மை அழிக்கிறது. அந்த ஆசை தான் முக்தி கிடைக்கவிடாமல் நம்மை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.
(இன்றைய காலகட்டத்தில் நமக்கு வெளியில் சுற்றுவதுதான் ஆசை)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...