Friday, April 17, 2020

இந்த கும்பல்கள் எல்லாம் காமெடி பீசுகள்.

 ஊரடங்கை மீறி சென்னையில் இருந்து சேலம் வந்த முதல்வர் மீது சேலம் திமுக MP பார்த்திபன், MLA ராஜேந்திரன் போலீசில் புகார்?
நேற்றைய தினம்
திராவிட முன்னேற்றக் கழகம் என்ற
எஃகு கோட்டையின்
கம்பி களில் ஒன்றாம்
சேலத்துத் தம்பி,
எடப்பாடியார் சேலம்
பறப்பட்டதை கண்டித்து
புகாரளித்திருக்கிறார்.

ஊரையெல்லாம்
ஊனமுற்றவர் போல பாவித்து
இல்லங்களில் அமரவைத்து
இருக்கிறீர்களே?

கொரானா என்ற
ஆரியர்கள்களுக்கு அடுத்தபடியான
கொடுமையின் சிறகுகளை
சீராக வெட்டி விட
தளபதி ஸ்டாலின் அவர்களின்
அழைப்பின் பேரில்
அனைத்துக் கட்சி கூட்டம்
அடியேன்
ஆசிரியர் வீரமணி
தொல்லார்
முத்தனார்
நல்லக்கண்ணார்
டோலார்
உண்டியலார் உள்ளிட்ட
சர்வ விஞ்ஞானிகளுடன்
கலந்து நடத்தியிருந்தால்,
எங்களுக்கும் தரமான உணவு
உறுதி செய்யப்பட்டிருக்கும்,
மிகுந்த உற்சாகத்துடன்
பார்ப்பனியத்தை விடவும்
சற்றே பணிவான கொரானா வை
மென்மையாக அடக்கியாளும் பொருட்டு
ஓர் உயரிய மருந்தினை கண்டுபிடித்து
மனிதகுலம் உய்ய வழிசெய்யும்
மகத்தான செயலுக்கு
தடைபோட்டு விட்டீர்.

நேரடியாக கூடியிருந்தால்,
காலையில்
வெண்பொங்கலுடன்
வேர்க்கடலை சட்ணி,
மல்லிப்பூ இட்லியுடன்
மணக்கும் கத்தரி சாம்பார்,
மசாலா தோசையுடன்
மிதமான காரச்சட்ணி,

மத்தியானத்திலோ
வெண்டை பொறியலுடன்
வேற்றுக்காய் அவியல்
முருங்கை சாம்பாருடன்
மூன்று வகை பதார்த்தம்,
காரக்குழம்புடனே
முழுநிலாவை ஒத்த
முழுதான அப்பளம்,
பார்ப்பணர்களை வெறுத்தாலும்
அவர்தம் கண்டுபிடிப்பான
பாயாசத்தை வெறுக்கலாகுமா?

மாலையில்
நெய் ஒழுகும்
அல்வாவுடன்
நேத்திரம் சிப்ஸ் கொறிக்க
நெஸ்கபே காஃபி பருக என
நாங்கள் ஆயத்தமான அத்தனையும்
அழித்தொழித்து விட்டு
ஐந்து பைசாவிற்கு பலனில்லா
காணோளியில் கதறுவதை
கண் குளிர கண்டும்
காது ஒலிர கேட்டும்
வேடிக்கை பார்த்து கொண்டு
ஏகடியம் பேசிவிட்டு
எதற்காக சேலம் பயணம்?

எனவே
முதலமைச்சர் சேலம் சென்றதை
எதிர்த்து புகாரளித்தது மட்டுமல்லாமல்
உலகமொலாம் உள்ளடங்கியிருக்க
பார்ப்பணர்களின் பரிதியாம்
சூரியன் மட்டும் எப்படி
உலகம் சுற்றலாம்?
ஆகவே
சூரியன் உலகவலம் வருவதை
கண்டித்து
ஐ நா பேரவையில்
புகாரளிக்க ஆவன செய்யுமாறு
தளபதி அவர்களை
ஒரு மனதாக
கேட்டுக்கொள்கிறோம்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...