Tuesday, April 7, 2020

இந்தியாவில்_மத_அரசியலா .?

ஆம். நம் நாட்டில் மத அரசியல் தான் நடந்துகொண்டிருக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக அல்ல; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கிறது.
ஆனால், இங்கே திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதைப் போல
மத அரசியல் செய்வது #பாரதிய_ஜனதா_கட்சியோ ,#ஆர்எஸ்எஸ்_பேரியக்கமோ அல்ல.
இந்தியாவில் பல ஆண்டுகளாக மதஅரசியல் செய்வதே திமுக,காங்கிரஸ்,திரினாமூல் காங்கிரஸ்,கம்யூனிஸ்டுகள்,மதிமுக,விசிக உள்ளிட்ட கட்சிகள் தான்.
எந்தவொரு நாகரிக நாட்டிலும் பெரும்பான்மைக்குச் சமமாக சிறுபான்மையையும் நடத்த வேண்டும். ஆனால்,இந்தியாவில் நிதர்சனம் வேறுமாதிரியாக இருக்கிறது.உலகின் பல்வேறு நாடுகளில் பெரும்பான்மை சமூகத்தால் சிறுபான்மை சமூகம் பாதிப்புக்கு உள்ளாகிறது.சிறுபான்மை சமூகத்தை அடக்கி, ஒடுக்கி வைக்கிறது பெரும்பான்மை.
ஆனால் இந்திய மண்ணிலோ நிலைமை தலைகீழ்! இங்கே பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக சிறுபான்மை முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்கள் பலவும் திராவிட,கம்யூனிச,காங்கிரஸ் துனைக்கொண்டு படுபாதக செயல்களைச் செய்து வருகின்றன...! பெரும்பான்மை இந்துக்களின் மத நம்பிக்கைகளை,பண்டிகைகளை,கோயில்களை,வழிபாடுகளை துணிச்சலாக, வெளிப்படையாகக் கொச்சைப்படுத்திப் பேசிவருகின்றன!
இந்துக்களிடையே மத அடிப்படையிலான ஒற்றுமை என்பது சில வருடங்களுக்கு முன்பு வரை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அதே சமயம், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மதத்தால் ஒற்றுமையாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களின் மசூதி,சர்ச்களில் ஒட்டு மொத்தமாக முடிவு செய்யப்படும் வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு தான் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக போன்ற கட்சிகள் முஸ்லிம், கிறிஸ்தவர்களைத் தாஜா பண்ணுவதற்காக நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு அவர்களுக்கு மததரகர் வேலையை செய்கிறார்கள் !
மேலும், இந்துக்களின் மத நம்பிக்கைகளைக் கேலி,கிண்டல் செய்து பேசினால் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ரசிப்பார்கள், நம்மை ஆதரிப்பார்கள் என்று
திக, திமுக,காங்கிரஸ்,மதிமுக,கம்யூனிஸ்டு, விசிக,போன்ற கட்சிகள் தொடர்ச்சியாக இந்து கடவுள்களையும், வழிபாட்டு முறைகளையும், மத விழாக்களையும் அவமதித்து வருகிறார்கள்...
உண்மையில், இந்துக்கள் விஷயத்தில் இந்தக் கட்சிகள் செய்யும் தகாத செயல்களை முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் உள்ளூர ரசித்து,அவர்களை பாராட்டி வருகிறார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது !
இந்த நிகழ்வுகள் எல்லாம்
60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்புறம் ஏன் கடந்த சில ஆண்டுகளாக #மதவாத_அரசியல் , #மதவாத_அரசியல் எனும் கோஷம் அதிகமாகக் கேட்கிறது ?
காரணம் ஒன்றே ஒன்று தான்...
இந்து கடவுள்கள் மீதும், பண்டிகைகளின் மீதும், மத நம்பிக்கைகள் மீதும்
தி.க., திமுக,காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள்,மதிமுக, விசிக போன்ற அரசியல் கட்சியினரும், கிறிஸ்தவ - முஸ்லிம் அமைப்பினரும்
இதுநாள் வரை தாக்குதல் தொடுத்தபோது
இந்துக்கள் அமைதியாக கண்டும் காணாமல் இருந்தனர்.ஆனால் கடந்த ஒருசில வருடங்களாக பலத்த எதிர்வினையாற்றுகிறார்கள்....!
அவ்வளவு தான் விஷயம்..!
சரி, இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்?
மோடி, முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுகிறாரா? இல்லை;
கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசுகிறாரா ? இல்லவே இல்லை.
அப்புறம் ?????
தான் ஒரு இந்து எனும் உண்மையை மிகவும் வெளிப்படையாகவும் பெருமையாகவும் காண்பிக்கிறார் !அது, கோடானுகோடி இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுக்க தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கிறது! இனி இந்துக்களின் எழுச்சியை எந்த திராவிட,கம்யூனிச,காங்கிரஸ் என எத்தனை தீயசக்திகள் வந்தாலும் அழிக்க முடியாது !
சிறுபான்மையினரின் வாக்குவங்கிக்காக இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்துக்களின் ஒன்றுப்பட்ட குரல் இனி மேலும் மேலும் ஓங்கி ஒலிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...