கொரோனா தொற்று ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் வென்டிலேட்டரில் இருந்த ஒருவரை , குணப்படுத்தி வெற்றிகரமாக வென்டிலேட்டர் விட்டு வெளியே எடுத்த பின், வெற்றி களிப்பில் இந்த புகைப்படம் எடுத்து இருக்கிறார்கள்.
இந்த மகிழ்ச்சி க்கு அது மட்டும் காரணமில்லையாம்.. வென்டிலேட்டர் விட்டு வெளியே வந்த அந்த கணவன், தன் மனைவியிடம் பேசி இருக்கிறார்.. அன்று அவர் மனைவியின் பிறந்தநாளாம்.. பிறந்த நாள் பரிசாக உயிர் பிழைத்த கணவனை பேச வைத்த சந்தோஷம் இது.
கணவன் மனைவி இருவரும் சந்தோஷ கண்ணீருடன் பேசி இருக்கிறார்கள்.
இத்தகைய ஆயிரக்கணக்கான நடமாடும் தெய்வங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்
வாழ்க்கை எவ்வளவு அழகானது அரிதானது, ஒவ்வொரு நொடியும் வாழ வேண்டும் என்பதை கொரோனா நமக்கு கற்றுத்தருகிறது !!
No comments:
Post a Comment