இரண்டு வயதான துறவிகள் தங்களது குருவை காண சென்று கொண்டிருந்த வேலையில் ஆற்றின் கரையினிலே ஒரு அழகிய பெண், ஆற்றை கடக்க முடியாமல் உட்கார்ந்து இருந்தாள்.
அவள் அவர்களிடம் ஆற்றை கடக்க உதவுமாறு கேட்டாள்... அதற்கு அந்த இரு துறவிகளும் ஏதும் சொல்லாமல் ஆற்றை கடந்து சென்று விட்டார்கள்.
இவர்களுக்கு பின்னால் ஒரு இளந் துறவி வந்து கொண்டு இருந்ததை பார்த்த அந்த இளம்பெண்,இளம் துறவியை பார்த்து, "என்னை அக்கறைக்கு செல்ல உதவுங்கள்" என்று கேட்டாள்.
அந்த இளம் துறவி அந்த பெண்ணிடம் ஏதும் பேசாமல் தன் இரு கைகளினால் அந்த பெண்ணை தூக்கி தன் தோல் மீது சாய்த்தார். பின்பு, ஆற்றில் இறங்கி நடந்து அக் கரையில் அந்த பெண்ணை இறக்கி விட்டு,ஏதும் பேசாமல் சென்று விட்டார்.
இந்த செயலை முன்னால் சென்று கொண்டு இருந்த இரண்டு முதிய துறவிகள் பார்த்தனர். பின்பு ஐந்து நாட்கள் கழித்து அந்த இளம் துறவியை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர்கள் இருவரும் அந்த இளம் துறவியைப் பார்த்து,
"நம்ம குரு எந்த பெண்ணையும் தொடக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறாரு.."ஆனால் நீர் ஐந்து நாட்களுக்கு முன்பு ஒருபெண்ணை உன் தோளில் சாய்த்து கொண்டு சென்றீர்..இது சரியா..? என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த இளம் துறவி அந்த இரண்டு மூத்த துறவிகளிடம்,
"நான் அப்பொழுதே அந்த பெண்ணை இறக்கிவிட்டேன்.
நீங்கள் ஏன் அந்த பெண்ணை ஐந்து நாட்கள் சுமந்து கொண்டு திரிகிறீர்கள் என்று சொல்லிவிட்டு, சென்று விட்டார்.
நீங்கள் ஏன் அந்த பெண்ணை ஐந்து நாட்கள் சுமந்து கொண்டு திரிகிறீர்கள் என்று சொல்லிவிட்டு, சென்று விட்டார்.
ஆம் நண்பர்களே ,
சிலர் கம்யூனிஸியம் பேசுவார்கள் ஏசி காருக்குள் உட்கார்ந்து தொழிலாளர்களின் வியர்வை பற்றி........
சிலர் சுயமரியாதை பற்றி பேசுவார்கள் மற்றவர்களை அவமானம் படுத்தி......
சிலர் ஜீவகாருண்யம் பற்றி பேசுவார்கள் கொசுவை அடித்துக் கொன்றே......
சிலர் பாவம், புண்ணியம் பற்றி பேசுவார்கள் பல பாவங்களை செய்துக்கொண்டே........
சிலர் பகுத்தறிவு பேசுவார்கள் மறைமுக இறை வழிபாட்டுடன்......
சிலர் இறைவழிபாடு செய்து கொண்டிருப்பார்கள் வெளியில் கிடக்கும் தனது செருப்பை நினைத்துக்கொண்டே...........
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
No comments:
Post a Comment