அவர் விபூதி கொட்டி விளையாடுவாராம், கேட்டால் என் கொள்கை என்பாராம்
அவருக்கு ஒரு கொள்கை உண்டாம் அதில் யாரும் தலையிட கூடாதாம்
ஆனால் இந்துக்கள் வழிபாடு, மந்திரம், சாஸ்திரம் , சம்பிரதாயம், நம்பிக்கை என வைத்திருக்கும் கொள்கைகளுக்குள் கருணாநிதி குடும்பம் தலைதலைமுறையாக உள்ளே வந்து குலைக்குமாம் குதர்க்கம் பேசுமாம்
இவர்கள் மற்றவர்களின் இந்து மத நம்பிக்கையினை கேலி செய்தால் அது புரட்சி, ஆனால் அவர் என்ன செய்தாலும் அது கொள்கை
ஸ்டாலினாரின் உள்றல் அட்டகாசம் எல்லை மீறி போய் கொண்டிருப்பது நிச்சயம் நல்லதல்ல
இந்துக்கள் கொள்கையினை இவர் மதிக்கட்டும் பின் இவர் கொள்கையினை உலகம் மதிக்கும்
மாறாக என் கொள்கை என் கை என பேசி கொண்டிருந்தால் அது எங்கணம் சரி?
கவனியுங்கள்
தேவரின் குருபூஜை என்பதே ஒரு வழிபாடு, அங்கே செல்வது என்பதே ஸ்டாலினாரின் கொள்கைக்கு விரோதம், அதை மனசுத்தியுடன் மீறினார்
அங்கே விபூதியினை கைநீட்டி வாங்கியதும் இவர் கொள்கைக்கு முரணானது அதையும் சரியாக செய்தார்
வாங்கி கீழே கொட்டியதெல்லாம் மகோன்னத திமிரில் மாமன்னன் எனும் அகங்காரத்தில் செய்த
அழிச்சாட்டியம், அதையும் செவ்வனே செய்தார்
எல்லாம் செய்துவிட்டுத்தான் "இது என் கொள்கை" என்கின்றார்
ஆக கருணாநிதி என்பவருக்காவது நான் பகுத்தறிவுக்கு எதிரான இடங்கள் எங்கும் செல்லமாட்டேன்,விபூதி தொடமாட்டேன் எனும் கொள்கை இருந்தது
ஸ்டாலினாருக்கு "விபூதியினை கீழே போட்டு விளையாடுவேன்" என்பதுதான் கொள்கையாய் இருக்கின்றது
கீழே போட்டு விளையாட விபூதிதான் கிடைத்தது என்பதெல்லாம் இந்துக்கள் மனதில் ரணம் பாய்ச்சு செயல்
நோன்பு கஞ்சியினை கீழே ஊற்றுவாரா? இல்லை சிலுவையினை கீழே போட்டு விளையாடுவாரா? செய்வாரா?
அவர் பகுத்தறிவாளராக, கொள்கை உடையவராக இருக்கட்டும் அதற்காக விபூதியினை கீழே கொட்டுவதெலாம் என்ன வகை?
அவருக்கு கொள்கை உண்டாம், ஆனால் இந்துக்கள் கொள்கையில் புகுந்து விளையாடி புண்படுத்துவாராம்
இவரெல்லாம் அடுத்த முதல்வர் என சொல்லி கொண்டிருப்பது தமிழகத்தில் 80% இந்துக்களின் தன்மானத்துக்கும், கடவுள் நம்பிக்கைக்கும் விடபட்டிருக்கும் மிகபெரிய சவால்
தமிழக இந்து ஒரு மானங்கெட்டவன், கொஞ்சமமும் மதபற்று இல்லாதவன் என நிரூபிக்க விடபட்டிருக்கும் சவால்
திறுநீற்றுக்காக உயிர்விட்ட ஏனாதிநாத நாயனாரும், மெய்பொருள் நாயனரும் வாழ்ந்த மண்ணில் இப்படி திருநீற்றை கீழே போட்டு விளையாடும் ஒரு ஆசாமி நான் அடுத்த மன்னன் என கிளம்புவதெல்லாம் தமிழகத்தில் பக்தியுள்ள இந்துக்களே இல்லை எனும் அளவு மோசமான அறிகுறி
"தமிழன் சோற்றால் அடித்த பிண்டம்" என கருணாநிதி சொன்னதை இன்னும் ஸ்டாலின் நம்பி கொண்டிருந்தால் அது திமுக எனும் இயக்கத்துக்கான பேரழிவு அன்றி வேறல்ல
எல்லா சாம்ராஜ்யங்களும் ஒரு அகங்காரமிக்க தலைவனாலே அழிந்தது என்பது வரலாறு, எல்லா நாட்டு வரலாற்றிலும் காண கிடக்கும் சாட்சி அது
அக்காட்சி திமுகவிலும் அரங்கேறும் என எம்பெருமான் சித்தம் வைத்திருந்தால் யார் மாற்ற முடியும்?
அவர் கீழே கொட்டியது விபூதி அல்ல, இறந்து எரிக்கபட்டுவிட்ட திமுகவின் அஸ்தி.
No comments:
Post a Comment