Tuesday, November 3, 2020

திரிபலா சூரணம் :

 * கடுக்காய், நெல்லிக்காய்,தான்றிக்காய் இந்த மூன்று கூட்டுக் கலவையே திரிபலா என்று அழைக்கப்படுகிறது.இதை தினமும் சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையாக வாழலாம்

கடுக்காயின் பயன்கள்:
* துவர்ப்பு சுவையுடையது கடுக்காய்.
*பசியைத் தூண்டும்.
* நீரழிவு நோய்கள் மூலம் ஏற்படும் இதய நோய்களுக்கு அருமருந்து.
*நீரழிவு நோயினால் ஏற்படும் உடல் இளைப்பு , கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதைகளுக் அருமருந்து.
*கப, வாத நோய்களை போக்க கூடிய ஆற்றல் வாய்ந்தது.
நெல்லிக்காய்:
* நெல்லிக்காய் குளிர்ச்சியை தரக்கூடியது. இனிப்பு சுவையால் நம் பித்தத்தை போக்கும் ஆற்றல்கொண்டது.இதயத்திற்கு நல்லது. நல்ல கண் பார்வையை அளிக்கக் கூடியது. காய்ச்சலை தடுக்கும்.
தான்றிக்காய்:
* துவர்ப்பு, இனிப்பு சுவையுடையது. குளிர்ச்சித் தன்மையை அளிக்கக் கூடியது.
* மூச்சுத்திணறல், கபம் ,பித்தத்தைப் போக்கக் கூடியது.
* கூந்தலை வளர்க்கக் கூடியது. கண்நோய் போக்கும்.
இம்மூன்றின் தனித் தன்மையைப் பற்றி பார்த்தோம். இப்பொழுது இம்மூன்றின் கூட்டு தன்மை மற்றும் பயன்களை பற்றி பார்ப்போம்.
திரிபலா சூரணம் முக்கூட்டு பயன்கள்:
* தினமும் சாப்பிட நமது முதுமையைப் போக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இளமையை தக்கவைக்கும் திரிபலா சூரணம் ஒரு அருமருந்து.
*நமது கிட்டப்பார்வை தூரப்பார்வை இவற்றை சரி செய்து கண்களுக்கு நல்ல ஒளியைத் தருகிறது.
* இதயத்திற்கு நல்ல ரத்த ஓட்டத்தை அளித்து கொலஸ்ட்ராலையும் குறையச் செய்கிறது.
*நீரழிவு நோய்க்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
*நமது உடலில் நிலையை சீராக வைத்துக் கொள்வதால் இது உடலுக்கு சுறுசுறுப்பை கொடுத்து சோம்பலை போக்குகிறது.
குறிப்பு:
* இந்த அற்புதமான திரிபலா சூரணத்தை தினமும் இரவில் ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் அருந்தி வர நம் உடலில் உள்ள அனைத்து நோய்களையும் கலைத்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளலாம்.அனைவரும் அருந்தி தன் உடலை பாதுகாக்கலாம்.
Image may contain: food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...