சரியான நேரத்தில் கழுத்தில் ஈர துண்டை போட்டு இறுக்கி வைச்சு செய்வதில் இந்தியாவில் இரண்டு அரசியல் தலைமைகள் சிறந்தவை.
ஒன்று இந்திரா. இன்னொன்று கருணா நிதி.
இந்த இருவரின் நினைவாற்றாலும் மிக அதிகம்.
மற்ற அரசியல் ஆளுமைகளெல்லாம் தவறி போய் மறக்கலாம். மன்னித்தும் விடலாம். ஆனால் இந்த இருவர் காத்திருந்து கருவறுப்பார்கள். கொஞ்சம் கூட கருணையே காட்ட மாட்டார்கள்.
அந்த நரித்தனத்தை இன்று தன் அடுத்த தலைமைக்கு கடத்தியது திமுக மட்டுமே !
திருமாவின் விசிக என்கிற ஜாதி கட்சிக்கும் 6 சீட்டு. வைகோ வின் மதிமுக வுக்கும் 6 சீட்டு.
ஆனால் திருமா வுக்கு சொந்த சின்னம்.
வைகோ சொந்த சின்னத்தில் போட்டி கிடையாது.
யாருடைய முன்னேற்றத்திற்காக இந்த வைகோ வெளியேற்றப் பட்டாரோ, யாரை மிகக் கடுமையாக கேவலமாக விமர்சனம் செய்தாரோ அவரது காலிலேயே விழுந்து தன் வாழ்நாளின் கடைசி தேர்தலாக இருக்க கூடிய இந்த பொது தேர்தலில் தன் சின்னத்தை அடமானம் வைத்து நிற்க வைத்தார்களே !! அது திமுக !!!
இந்த மதிமுக வின் 6 ஆறு தொகுதிகளிலும் கட்சி பெயரை சொல்லாமல் "உதய சூரியனை பார்த்து போடுங்கம்மா ஓட்டு" என்றுதான் கூவுவார்கள்.
வைகோ போன்றவர்கள் எப்படி நிம்மதியாக தூங்க போவார்கள். !!!
இத்தனை கேவல பட்டும் வாழ்வது ஒரு வாழ்வா !!
No comments:
Post a Comment