1. *பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.*
2. *இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.*
3. *யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.*
4. *ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.*
5. *பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.*
6. *நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பானதாகும்.*
7. *உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.*
8. *உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.*
9. *வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.*
10. *தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்துபோகிறான்.*
11. *உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.*
12. *செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.*
13. *அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.*
14. *வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன்,இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.*
15. *தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.*
16. *பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.*
17. *கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.*
18. *ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும்சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.*
19. *சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.*
20. *ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.*
No comments:
Post a Comment