Saturday, March 13, 2021

ஆண்டவனுக்கு நன்றி சொல்லவே கோயிலுக்குச் செல்வோம்.

 *இல்லாத விஷயங்களுக்காக வருத்தப்படுவதை விட்டு விட்டு இருக்கும் விஷயங்களுக்காக நன்றி சொல்லிப்பாருங்கள்‌ நீங்கள் நினைப்பதை விட உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக மாறும்...!!!*

*பக்குவப்பட்ட நிலத்தில் தூவப்பட்ட விதைகள்தான் நல்ல விளைச்சளைத் தரும். அதுபோல் பக்குவப்பட்ட மனதை கொண்டவர் வாழ்வில் தான்நல்ல வெளிச்சமும் வரும்.*
*நிதானம் என்னும் ஆயுதத்தை பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் எதையும் சாதிப்பார்கள்.*
*நிதானமே நம் வாழ்வின் பிரதானம்.*
*உங்கள்மீது கல்லெறிபவர்களுக்கெல்லாம்... பதிலுக்கு நீங்கள் கல்லெறிந்து கொண்டிருந்தால்,*
*உங்கள் இலக்கை உங்களால் அடையவே முடியாது.*
*புகழ்வதைக் காட்டிலும் ஊக்கப்படுத்துவது சிறந்தது.*
*வாழ்வதைக் காட்டிலும் வாழ வைப்பது சிறந்தது.*
*இதை மனதில் வைத்து வாழ்ந்தால் வாழ்க்கையே சிறந்தது.*
*சினம், கவலை, பேராசை இம்மூன்றும் வாழ்க்கைக்கு நன்மைதரும் வழிகளை அடைத்து விடுகின்றது.*
*மனிதர்கள் முன்பாக நல்ல பெயர் வாங்குவதை விட மனச்சாட்சி முன்பாக நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்கள். நல்ல விஷயம் நடக்கும்.*
*பிரச்சனைகளை தூரத்தில் வைத்துப் பழகுங்கள்.*
*நிம்மதியை பக்கத்தில் வைத்துப் பாருங்கள்.*
*அற்புதமான வாழ்வு வரும் அனுபவியுங்கள்.*
*"உங்களை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால்..*
*விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும்.*
*நாம் எதிர்பார்த்து காத்திருந்தால் எதுவும் நடக்காது.*
*நாம் எதிர்பாராத நேரத்தில் அது நடக்கும்.*
*அதுதான் இறைவனின் செயல்.*
*இறைவனையே நம்புங்கள்.*
*அவர் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்ததைவிட மேலானவற்றையும் தந்து உங்களுக்கு மகிழ்விப்பார்.*
May be an image of text that says 'உங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை... எத்தனை பேருக்கு கிடைக்கவில்லை என்று நீங்கள் தெரிந்து கொண்டால்... ஆண்டவனுக்கு நன்றி சொல்ல மட்டுமேகோவிலுக்கு செல்வீர்கள்...'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...