திமுக தேர்தல் அறிவிக்கப் பட்ட முதல் வாரத்தில் என்ன செய்யும்?
இரண்டாம் வாரத்தில் என்ன செய்யும்?
கடைசி நாலு நாட்களில் என்ன செய்யும்?
தேர்தல் நாள் அன்று என்ன செய்யும்?
என்று எங்களுக்கு முழு அத்துபடி !
1. முதலில் நாங்கள்தான் ஜெயித்து விடுவோம் என்று அசாத்திய பில்டப் கொடுத்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கும்.
2. அப்புறம் கடுமையான சொற்களால் எதிர் கட்சி வேட்பாளர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி தடுமாற செய்யும்.
3. அடுத்து எத்தனை தொகுதிகளில் ஜெயித்து வருவார்கள் என்று லயோலா போன்ற அல்லகைகளை விட்டு கருத்து திணிப்பு செய்யும்.
இப்போது இந்த பணியிலெல்லாம் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகத்தில் இருக்கும் 200 ரூ உளுத்தம் பருப்புகள் மிகவும் ஈடுபடுத்த படுகின்றனர்.
4. அதற்குள் இவர்களின் பொய் பிம்பம் உடைய தொடங்கும் போது ஜாதி சங்கங்களின் உதிரி தலைவர்கள் தினசரி விளம்பரங்கள் திமுக ஆதரவாக வெளியிடப்படும்.
இப்போது அந்த பித்தலாட்டத்தில் மத குருமார்கள் முல்லாக்களும் ஜாமாத்தூக்களும் சேர்ந்து விட்டனர்.
5. கடைசி வாரத்தில் இதுவரை நீங்கள் நடுநிலை என்று நினைத்திருந்த ஸ்லீப்பர் செல்கள் தட்டி எழுப்ப பட்டு அவர்கள் தங்கள் பங்குக்கு எதிர்கட்சியினர் அப்படி பெரிதாக வெற்றி பெற வாய்ப்பில்லை என்று பேச வைப்பார்கள்.
6. கடைசி அஸ்திரம் எது தெரியுமா? தோற்கும் கூட்டணிக்கு ஏன் சார் ஓட்டை போட்டு வேஸ்ட் பண்றீங்க என்று ஒரு கூட்டம் வரும்.
நல்லா கவனிச்சு பாருங்க.
1967 முதல் இப்படி வேறு எந்த கட்சியும் சொன்னதில்லை. இப்படி சொல்லி உங்களை குழப்பிய ஒரே கட்சி திமுக தான்.
இது இவர்களின் பயத்தையே காட்டுகிறது.
ஜனநாயகத்தில் "வேஸ்ட்" ஓட்டு என்று கிடையவே கிடையாது.
நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும் அது உங்களின் தேர்வை பிரதிபலிக்கும் ஒரு முறை !
அவ்வளவு தான்.
ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் உங்கள் ஓட்டு மதிப்பு மிக்கது என்பதும், தோற்று விடும் என்று நம்பும் கட்சிக்கு ஓட்டு போட்டால் அது வேஸ்ட் என்பதும் எத்தனை அபத்தம்.?
ஜெயித்து விடும் என்று தெரிந்து விட்டால் அந்த கட்சிக்கு நீ போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன? உண்மையில் இது வேண்டுமானால் வேஸ்ட் என்று சொல்லலாம். எப்படியும் ஜெயித்து விடும் என்றால் திமுக ஏன் இத்தனை கூச்சல் போட வேண்டும்?? எப்படியும் ஜெயித்து விடும் என்றால் திமுக காரன் ஓட்டு போடாமல் இருப்பானா?
வெற்றியோ தோல்வியோ நீ ஓட்டு போடுவதால் மட்டுமே தீர்மானிக்கப் படுகிறது என்கிற அடிப்படையையே மறக்கும் படி உளவியல் ரீதியாக குழப்பும் கட்சி திமுக !!
இந்த திருடர்கள் எந்த துறையிலும் புகுந்து கெடுக்கும் புற்றுநோய் போன்றவர்கள். இவர்கள் முற்றிலும் ஒழிக்கப் பட வேண்டியவர்கள்.
எனவே இது போன்ற கயவர்களின் பொய்யில் மயங்காமல் அனைவரும் ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டு போட்டு திமுகவை தோற்கடிப்போம்.
ஆதரிப்போம். அதிமுக - பாஜக - பாமக கூட்டணியை !!
ரவி சுந்தரம்
01/04/2021.
பி. கு:- திரும்பவும் சொல்கிறேன். நல்ல விஷயங்களை நாலு பேருக்கு தெரியும் விதத்தில் பரப்புவதில் தவறில்லை. நான் மேலே சொன்ன கருத்தை கொஞ்சம் சிந்தியுங்கள். சரியாக இருந்தால் பகிருங்கள். காசா.. பணமா..
No comments:
Post a Comment