விருதுநகர் மாவட்டத்தில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ராஜபாளையத்தில் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
எதிர்பார்த்தது போலவே, 30 நிமிட பேச்சில், 10 நிமிடத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்காக ஒதுக்கி இருந்தார். 'ரவுடித்துறை அமைச்சர், பபூன் ரவுடி, அவரை பார்த்தாலே பபூன் ஞாபகம் தான் வருகிறது' என, நீண்ட நாள் கோபத்தை வாரி இறைத்தார். 'ஆட்சிக்கு வந்தவுடன் ராஜேந்திர பாலாஜி மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை வேகப்படுத்தி, அவரை சிறைக்கு அனுப்புவது தான் முதல் வேலை' என்று கொதித்தார். அமைச்சர் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்றாலும், தனிப்பட்ட விரோதம் போல ஸ்டாலின் இப்படி கிழித்து தொங்க விட்டிருப்பது, அப்பகுதி மக்களிடம் வியப்பையும், எரிச்சலையும் உண்டாக்கி இருக்கிறது.
'ஸ்டாலினின் வெறுப்பு அரசியல் பேச்சு தேர்தல் நெருக்கத்தில் எல்லை தாண்டி போவதால், சாதகமாக இருந்த வாக்காளர்களும், அ.தி.மு.க., பக்கம் திரும்பி விடுவார்களோ?' என, உ.பி.,க்கள் கலக்கத்தில் உள்ளனர்.
No comments:
Post a Comment