திமுக அணியின் பல பரப்புரைகளில் மீண்டும் மீண்டும் சொல்லப் படுவது என்னவென்றால் இந்த தேர்தல் அதிமுக அணியோடு நடக்கும் மோதல் அல்ல !! பாஜக அணியோடு நடக்கும் மோதல் என்றே சொல்லி வருகின்றனர்.
இதில் முதல் விஷயம்.. இவர்கள் தான் ஒரு இரண்டு மாதம் முன்பு வரை பாஜக இங்கு கால் ஊன்ற முடியாது என்று கொக்கரித்தவர்கள்.
அப்படியிருக்க கால் ஊன்றாத ஒரு தேசிய கட்சியோடு எப்படி இவர்கள் மோத முடியும்??
அப்படியென்றால் பாஜக கால் மட்டுமல்ல வேர் விட்டு வளர்கிறது என்பதுதானே உண்மை !!
அடுத்து.. இன்று சிறுபான்மையினரை கிளப்பி விட்டு பாஜக வோடு மோதல் என்று ஓட்டு வாங்கி பதவியில் வந்தாலும் இவர்கள் முதலில் அல்வா கொடுக்கப் போவது இதே சிறுபான்மையினருக்கே !!
சென்னையிலிருந்து தவழ்ந்தே டெல்லி வரை செல்வார்கள்.
அதுக்கு அவர்களிடம் ஏற்கனவே ஒரு பழைய ரெக்கார்ட் வைத்திருக்கிறார்கள்.
அரசியலில் நிரந்த பகைவனும் இல்லை.
நிரந்தர நண்பனும் இல்லை !!!! என்பதுதான் அது !!
உங்களுக்காக உருளுகிறேன் என்று உருளுவார்கள்.
எப்படி பார்த்தாலும் பாஜக வெற்றிதான்.
ஆனால் ஒன்று !! அதிமுகவை போல இவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டும் பேச மாட்டார்கள்.
மேலும் இப்பொழுது இருக்கும் அரசு.. வாஜ்பாய் அரசு அல்ல. மோடி, அமித்ஷா அரசு..
சரியான சமயத்தில் பிதுக்கத்தான் போகிறார்கள்.
ஆகவே பாஜக வை எதிரியாக பார்க்கும் சிறுபான்மையினரே !! நீங்கள் சாட்சிக்காரனை நம்புவதை விட சண்டைக்காரனை நம்புவது நல்லது !!
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதீர்கள்.
No comments:
Post a Comment