"#எதிர்க்கட்சித்_தலைவரான_வாஜ்பாயை...,
நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று #வரவேற்ற_இந்திய_ஜனாதிபதி"
அரசியல் வேறுபாடுகளை கடந்து...
காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாக
செயல்பட்ட பண்பாளர் வாஜ்பாய்.
இந்திய பிரதமராக நரசிம்மராவ்
செயல்பட்ட போது...
எதிர்கட்சி தலைவராக
வாஜ்பாய் செயல்பட்டார்.
அக்காலகட்டத்தில் வல்லரசு நாடுகளில், ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக செயல்பட்டது.
அப்போது,
*
"காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டு''மென்ற
மசோதாவை ஐநாவில்
வல்லரசு நாடான அமெரிக்கா
பாக்கிஸ்தானின் தூண்டுதலால்
தாக்கல் செய்தது!
அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர்.
ஆனால், இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால்...
அந்த மசோதா வெற்றிபெற்று விடும்- என்பதையும்,
அடுத்த இருநாட்கள் ஐநா-விற்கு விடுமுறையாக இருப்பதால் அதற்குள்ளாக வலிமையான கருத்துக்களையுடைய இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் -
என்னும் தகவல் இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது.
*
இது தொடர்பாக
இந்திய ஜனாதிபதி
சங்கர்தயாள் சர்மாவும்,
பிரதமர் நரசிம்மராவும்
ஆலோசித்தனர்..
''ஐநா விவாதத்தில் பங்கேற்பதற்கு எதிர்கட்சித் தலைவரான வாஜ்பாயே சிறந்தவர்'' - என்னும் நரசிம்மராவின் முடிவை ஏற்று...
குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வாஜ்பாயை, தனி விமானத்தில் ஐநா கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
*
ரஷ்யா மட்டுமே
மசோதாவிற்கு #எதிர்ப்பு.
பிரான்சும் பிரிட்டனும்
முடிவெடுக்காத நிலை.
- இந்த நிலையில் ஐநா விவாதத்தில் பங்கேற்க வருகின்ற வாஜ்பாயின் வருகையை அமெரிக்க பத்திரிகைகள் முக்கியத்துவமாகக் கருதியது.
பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின..
*
அமெரிக்காவில் வந்திறங்கிய வாஜ்பாயிடம், அமெரிக்க பத்திரிகைகள் பேட்டி எடுக்க போட்டியிட்டன...
வாஜ்பாயி -
"எனது நாட்டிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக எங்கள் அரசு நடவடிக்கை எடுப்பதை வல்லரசு நாடுகள் எதிர்ப்பது தவறு... அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற மசோதாவை வல்லரசு நாடுகள் ஆதரித்தால்...
இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு காரணமாக இருக்கும் நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்"..
- - என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
*
பத்திரிகைகள் -
"எதிர்கட்சித் தலைவரான உங்கள் முடிவை இந்திய அரசு ஏற்குமா"..? - என்று வாஜ்பாயிடம் கேள்வி எழுப்பினர்...
வாஜ்பாயி -
"நான் எதிர்கட்சித் தலைவராக இங்கு வரவில்லை... இந்தியாவின் #தலைமைப்_பிரதிநிதியாக வந்துள்ளேன்... ஏற்கனவே இங்கு வந்துள்ள இந்திய அமைச்சர்கள் எனக்கு கட்டுப்பட்டவர்கள்... எனது முடிவே இந்தியாவின் முடிவு"
- என்று கூறினார்.
*
வாஜ்பாயின் பத்திரிகை பேட்டி
வெளியான சில மணி நேரங்களில்...
பிரான்சும், பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டின.
காரணம், அவ்விரு நாடுகளிலும் அப்போது தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது.
*
அடுத்த நாள்,
இந்தியாவிற்கு எதிராக தான் கொண்டுவந்த மசோதா தோல்வியடைந்து விடுமென்பதை உணர்ந்த அமெரிக்கா...
அந்த மசோதாவை வாபஸ் வாங்கியது.
*
மாபெரும் வெற்றியாளராக
இந்தியா திரும்பிய வாஜ்பாயை....
வழக்கத்திற்கு மாறாக...
விமான நியைத்திற்கு சென்று இந்திய ஜனாதிபதி வரவேற்றார்.
No comments:
Post a Comment