வீரத்தின் அடையாளமாக இறுதிவரை ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுநாள் பதிவு.
(கிபி1799 அக்டோபர் 16)
📌பெற்றோர்-திக்விஜய கட்டபொம்மு- ஆறுமுகத்தம்மாள் பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார்.
📌கிபி 1790 பிப்ரவரி 2ல் 47வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
📌கட்டபொம்மனுக்கு ஊமைத்துரை மற்றும் துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகள். துணைவியார் ஜக்கம்மாள்.
📌இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
📌1797 ல் ஆங்கில தளபதி ஆலன் துரையின் படைகள் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியுற்றது.
📌செப்டம்பர் 5 1799 ல் பானர் மேனால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது.
📌பின்னர் கைது செய்யப்பட்டு கிபி 1799 ல் இதே நாளில் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
📌1974 ல் தமிழக அரசு இவரது நினைவாக நினைவு கோட்டை ஒன்றைக் கட்டியது.
📌ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தென்னிந்தியாவில் சுதந்திர போரை தொடங்கிய கட்டபொம்மனின் தியாகத்தை போற்றுவோம்
🙏
No comments:
Post a Comment