Tuesday, October 12, 2021

இப்போதைக்கு நல்லா இருப்பாங்க. அப்புறம் இருக்கு.

 கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தில் இடம் வாங்கி வீடு கட்டுகிறோம்.

பிடித்த வண்டி, வாகனங்கள், வித விதமான ஆடை, ஆபரணங்கள் வாங்குகிறோம்.
பேங்க் பேலன்ஸ் கணிசமாக சேர்க்கிறோம். எல்லாம் நம் உழைப்பு என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு நாள் இறப்பு வருகிறது. உயிர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறு ஜென்மம் எடுத்து புதிய உடலில் புகுந்து பூர்வ ஜென்ம நினைவுகளை இழக்கிறது.
இது எவ்வளவு கொடுமை . கடந்த ஜென்மாவில் தான் உழைத்துக் கட்டிய வீட்டில் யாரோ இருக்கிறார்கள் .
தான் உழைத்து வாங்கிய வண்டி, ஆடை, ஆபரணங்களை யாரோ பயன் படுத்துகிறார்கள் .
நாம் போய்க் கேட்கவா முடியும்? உண்மையாக நேர்மையாக உழைத்துப் பெற்ற செல்வம் என்றாலும் கூட அது அடுத்த ஜென்மாவில் நாம் போய்க் கேட்க முடியாது.
நம் சொத்துகளின் முன்னே கூட நாம் நடமாடிக் கொண்டிருக்கலாம். நமக்கு அடையாளம் தெரியாது.
சிந்தித்துப் பார்த்தால் பாவம் செய்து இந்த ஜென்மாவில் சம்பாதிப்பது வீண் என்று புரியும்.
நாம் நேர்மையாக அளவோடு நமது தேவைக்காக மட்டும் சம்பாதித்து, அதைப் பயன்படுத்தி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து மறைவதே சுகம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...