Tuesday, October 12, 2021

காரைக்குடியில் சித்தர்கள் வணங்கும் நவபாஷாண பைரவர் !

 இந்த சிலையின் சக்தியை தாங்கும் ஆற்றல் கலியுக மனிதர்களுக்கு இல்லை......

சுமார் 12000 வருடங்களுக்கு முன் மகா சித்தர் போகர் பெருமானால் உருவாக்கப்பட்ட நவபாஷாண பைரவர்.
இவர் காசி ஷேத்திரத்தில் இருந்து இங்கு வந்தவர் என்று கூறுகின்றனர்.
இவரின் சக்தி தற்போதும் மிக மிக அதிகமாக உள்ளதால் இவருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் மற்றும் சாற்றப்படும் வடை மாலை பிரசாதமாக தருவதில்லை..
அந்த வடை மாலை கோவில் மேல் போட்டு விடுவார்கள் பறவைகளும் அதை தொடுவதில்லை இவரின் அதிர்வுகள் மிகவும் அதிகமாக உள்ளது ..
பழனி முருகர் சிலா ரூபம் செய்வதற்கு முன்பே இதை செய்ததாக செவி வழி செய்தி உண்டு..
வரலாறு சரியாக தெரியவில்லை..
இவருக்கு இரண்டு முகங்கள் உண்டு..
பின்புற முகத்தை காண முடியாது அந்த முகத்தால் வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் சனீஸ்வரருக்கு மட்டும் காட்சி தருவதாக ஐதீகம்..
இவருக்கு வன்னி இலைகளில் பூஜைகள் நடை பெறுகிறது என்பது சிறப்பு.
மிகவும் அபூர்வ சக்தி படைத்த இந்த பைரவர் கண்டராமாணிக்கம் ஸ்ரீ சுகந்தவனேஸ்வரர் என்ற கோவிலில் ஆண்டபிள்ளை நாயனார் என்ற பெயரில் வீற்றிருக்கிறார்.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...