கணக்கெடுக்க ஆளில்லை, புண்ணாக்கு இல்லை என்பதெல்லாம் ஜுஜுபி. ஓய்வு பெற்ற TNEB மூத்த அதிகாரி, கூறியது பின்வருமாறு :
மாதாமாதம் கட்டினால் வசூல் தற்போதைய வருமானத்தில் 35% மட்டுமே கிடைக்கும். 2 மாதத்திற்கு ஒருமுறை எனும்போது, நடுத்தர வர்க்க மக்கள் ( Highest slab ) ஏதோ அபராதத் தொகை போல் கட்டுகிறார்கள். அது அப்படியே சரிந்து, தவழ்ந்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும். ஸ்மார்ட் மீட்டர் எப்போ ஆர்டர் போட்டாங்க?!. எல்லா மின்நுகர்வோர்களுக்கும் இது எப்போது நிறைவேற்றப்படும் என கேட்கிறீர்களா?!. அவ்வளவு வெள்ளந்தியா நீங்க?!.
பாடாவதி BSNL கூட அங்கேயே பில் தயாரித்து நமக்கு முந்தைய தலைமுறைக்கும் முன்னாலேயே அனுப்பிட்டிருக்காங்களே?!. ஆள் பற்றாக்குறை பார்க்கப்போனால் BSNLக்கு தான் மின்வாரியத்தை விட. பணம் கட்டலைனா, Fuseஐ பிடுங்கிடுவேன், என்னை கவனித்தால், துரட்டி போட்டு, நானே இலவச மின்சாரம் தருவேன் எனக்கூறும் லைன்மேன்களையும் பார்த்திருக்கிறேன்.
தி.மு.க லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பாங்களாம். தண்ணி வத்தின கிணத்துல அவங்க மோட்டார் போட்டுக்கலாமாம்!.
அணில் ராமருக்கு இளநீர் கொடுத்தது. எனவே அதன் மீது மின்சார அபாண்ட பழி போடாதீர்கள்!. ஓணான் ராமருக்கு ஒண்ணுக்கு குடுத்ததுன்னு அதற்கு மூக்குப்பொடியோ, கல்லடியோ கொடுக்காதீர்கள்!. ( மோடி, 'ராமரை' வைத்து தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்து உங்களை 'வச்சு செஞ்சுருவாரு!' . சூதானமா இருங்க.)
No comments:
Post a Comment