கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்து இருப்பவர்கள் அந்த காரின் காப்பீட்டு பாலிசியை படித்து பாருங்கள், அதில் விபத்துகள் ஏற்பட்டு கிளைம் எதுவும் வாங்கப்படாமல் இருக்கும் பட்சத்தில்
No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்,
அவ்வாறு விபத்து கிளைம் ஏதும் வாங்காமல் இருக்கும் நிலையில் உங்கள் காரை நீங்கள் விற்றுவிட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால், நீங்கள் விற்கப்போகும் காரின் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனுகி *No Claim Bonus* Certificate வேண்டும் என்று எழுத்து பூர்வமாக கேளுங்கள் .
அவர்கள் தரும் அந்த Certificate ஐ பெற்று புதிய கார் வாங்கும் ஏஜென்சியிடம் கொடுத்து புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...அதே அளவு Discount பெற்றுக்கொள்ளுங்கள் . அது உங்கள் உரிமை .
மேலும் உங்களின் பழைய கார் வாங்குபவர் அவர் பெயரில் இன்ஸுரன்ஸை மாற்றும் போது, உங்கள் நோ கிளைம் போனஸை அவர் பயன்படுத்த முடியாது, வித்தியாச பிரிமியத்தை அவர் கட்டியே ஆக வேண்டும் .
எனவே நீங்களும் பயன்படுத்தாவிட்டால் அந்த நோ கிளைம் போனஸ் யாருக்கும் பயன் இல்லாமல் போய்விடும்.
No claim bonus என்பது காருக்கு அல்ல...விபத்தில் சிக்காமல்
காரை இயக்கி வந்தாரே அந்த காரின் உரிமையாளருக்குதான் சொந்தம் .
அந்த No claim bonus ஐ புதிய வாகனம் எடுக்கும்போது மறக்காமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள் .
இது போன்ற தகவல்களை எந்த காப்பீட்டு நிறுவனமும் விளம்பரம் செய்வதில்லை.....
நமக்கு தெரிவிப்பதுமில்லை....*
No comments:
Post a Comment