Wednesday, October 6, 2021

*ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?*

 அரசும்

மீடியாவும்
பிரபலங்களும்...
*'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!*
ஆனா
*"கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.*
ஏன்?
இப்ப
சாலையோரம் வைத்திருக்கும்
மரம்,
அரசுப் பள்ளி,
மருத்துவமனை,
அலுவலகங்கள்
இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....
அங்கு
*கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.*
ஏன்?
எங்கெல்லாம்
*புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ*
அந்தச் சாலைகளையெல்லாம்
விரிவு படுத்துகின்றேன் என்று
அரசு
அந்தப்
புளிய மரங்களை வெட்டிவிடும்.
விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும்.
*அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மர்மங்களை மட்டுமே நடும்.*
பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு
சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.
அப்பொழுதும் கூட அந்த மக்கள்
*காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.*
எனக்குத் தெரிந்து ...
*ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர்*
என எவரும் சிந்திக்கவில்லை.
நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் *நமது முதன்மையான உணவே பழம்தானே.*
ஆனால் நாமே சிந்திக்கவில்லையே.
*மா பலா நாவல் அத்தி கொய்யா....*
என்று எத்தனை மரங்கள் உள்ளன.
அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?
நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.
*காரணம்...*
MMMC: mass media mind control.
*"மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.*
தொடர்ந்து
*மரம் நிழல் தரும் காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே* சொன்னார்கள்....
அதை மட்டுமே மனிதனும் நினைத்துக்
கனியை மறந்தான்.
கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .
ஆனால் இதையெல்லாம் தடுத்து
*கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.*
அதையெல்லாம் ஏதோ
'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித்
தின்னு
உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.
கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.
நல்லா புரிஞ்சிக்குங்க...
*'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.*
மண்ணில் பிறந்த *அனைத்து உயிரினங்களுக்கும்* இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.
அதை முழு முற்றாகத் தடுத்து,
*'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..*
நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...
கருவை மரங்கள் உள்ள இடங்களிலும்
மற்றும்
அனைத்து இடங்களிலும்
மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும்.
தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.
*உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.*
நம் மனநிலையே
மகிழ்வாக இருக்கும்.
உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.
நீங்கள்
மீண்டும் மீண்டும்
இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....
அப்பொழுது *'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'*
ஓர் உயர்ந்த மண்ணை
இப்படி நரகமாக்கிவிட்டு,
ரேசன் கடையில் புழுத்துப்போன அரிசிக்கு வரிசையில் நிற்கிறோம்.
*ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.*
அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.
*ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.*
கார்ப்பரேட் அறிவாளியல்ல...
நாம் சிந்திக்கவில்லை அவ்வளவே.
*'மனிதன் சிந்திக்காதவரை' "இவையெல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்."*
இப்படிக்கு..
மரங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...