பெரியார் பல்கலையில் நடந்த முறைகேடுகள் குறித்து முன்னாள் துணைவேந்தர் உட்பட மூவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் அடுத்தடுத்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தராக 2014 - 2017 வரை பதவி வகித்தவர் சுவாமிநாதன்.
இவரது பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. பேராசிரியர் நியமனத்தில் நடந்த மோசடியில் ஆவணங்கள் மாயமானது குறித்து ஓய்வு பெற்ற பதிவாளர் அங்கமுத்து மீது மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இதையடுத்து அங்கமுத்து 2018 பிப். 19ல் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் முறைகேடுகளில் தொடர்புடையோர் குறித்து 10 பக்க கடிதம் எழுதி லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு அனுப்பியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்தது.லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது: தேர்வு முடிவுகளை வெளியிட தேவையான அனைத்து வசதிகளும் பல்கலையில் உள்ளன. அத்துடன் அது ரகசியம் காக்க வேண்டியது.
அதேபோல் பல தனியார் கல்லுாரிகளில் உயர் படிப்புக்கு அனுமதி வழங்கியதில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற துணைவேந்தர் சுவாமிநாதன் மறைந்த பதிவாளர் அங்கமுத்து தேர்வு கட்டுப்பாடு முன்னாள் அலுவலர் லீலா மீது ஐந்து
பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு கூறினர்.
நியமனங்களிலும் மோசடி
பெரியார் பல்கலையில் 154 பேர் கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதில் 2014 - 2017 வரை தேர்வு கட்டுப்பாடு அலுவலர் லீலா மற்றும் பல பேராசிரியர்களை அப்போதைய துணைவேந்தர் சுவாமிநாதன் நியமித்தார். இதில் முறைகேடு நடந்துள்ளது. அதேபோல் அலுவலக ஊழியர் உட்பட பிற பணியாளர்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்ததாக பல்கலை தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளது.
அந்த அறிக்கை அடிப்படையில் சுவாமிநாதன் மறைந்த பதிவாளர் அங்கமுத்து மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. மேலும் பல்கலையில் 2014 - 2017 வரை நடந்த மோசடி தொடர்பாக இரு வழக்குகள் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்குகளால் தற்போது பணியில் உள்ள பலரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment