மேஜர் சந்திரகாந்த் நாடகத்தில் வரும் இரு சகோதர பாத்திரங்கள்....
ஸ்ரீகாந்த், ரஜினிகாந்த்...
ரஜினிகாந்த் வில்லனாக உள்ளே வரும்போது ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார்....
'கோமாதா என் குலமாதா', 'ராஜநாகம்' போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்..
பின் ஒரு சில படங்களில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து வில்லனாகவே ஆகிவிட்டார்..
ரஜினியுடன் பைரவி, சதுரங்கம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்கள்..
சதுரங்கத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக கல்லூரி மாணவன் வேடத்தில் கலக்கியிருப்பார் ஸ்ரீகாந்த்..
வில்லனாக ஆரம்பித்து தயாரிப்பாளர் கலைஞானத்தால் துணிந்து ஹீரோவாக இறக்கப்பட்ட ரஜினியின் முதல் படமான பைரவியில் இவர் தான் வில்லன்...
தம்பிக்கு எந்த ஊரு படத்திலும் ஸ்ரீகாந்த் வில்லன் தான்...
ஹீரோ வில்லனாக...
வில்லன் ஹீரோவாக..
எப்படி ஒரு தலைகீழ் மாற்றம்..
ரஜினியின் அசுர வளர்ச்சியில் ஸ்ரீகாந்த் காணாமலே போய்விட்டார்..
இருந்தாலும்கூட வெண்ணிற ஆடை முதல் அவரது அனைத்து படங்களும் நெஞ்சில் நிறைகிறது 
தனக்கு கிடைத்த கதாபாத்திரத்தில் எல்லாம் சிறப்பாகத்தான் ஜொலித்தார்..
அதற்கு நல்ல உதாரணம் #தங்கப்பதக்கம் 
தமிழ் திரையுலகின் முதல் #காந்த் நடிகரான ஸ்ரீகாந்த் என்ற வெங்கட்ராமனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

No comments:
Post a Comment