Tuesday, October 19, 2021

மறக்க மனம் கூடுதில்லையே.

 நாம் சிறு குழந்தையா இருக்கும்போது சாதத்தை குழைய வடித்து நெய்ஊற்றி தெளிவா ரசம் ஊற்றி நல்ல வழுமூன பிசைந்து அம்மா கையால் சாதம் ஊட்டும்போது கிடைத்தது பின்னாலில் எவ்வளவு விதம்விதம்மா சாப்பிட்டாலும் அந்த சுவையும் அன்பும் கிடைக்காது. அதை மறக்க முடியுமா?

அரிசி உப்புமா வெங்கலப்பானையில் பண்ணினா அடியில் உள்ள தீசல் சுரண்டி, துளி துளியாய் பிரித்து எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தருவார்கள். அந்த தீசலுக்கு ஒரு சண்டை நடக்கும் பாருங்கள் அப்படி ஒரு குடிமிப்பிடி சண்டைதான். இதை மறக்க முடியுமா
அதேபோல் நெய் காய்ச்சின வெங்கல உருளியில் வெல்லம் கொஞ்சம் கோதுமை மாவு அல்லது அரிசிமாவு சேர்த்து அப்படியே உதிர் உதிரா கொஞ்சம் கொஞ்சம் தருவார்கள். அமிர்தமா இருக்கும். இதை மறக்க முடியுமா
சாதாரண நாட்களில்கூட மீதம் உள்ள எல்லா குழம்பு கூட்டு எல்லாம் ஒண்ணாக் கொட்டி கொதிக்க வைத்து சாதத்தை போட்டு கலந்து அவ்வளவு குழந்தைகளையும் முற்றத்தில் உட்காரவைத்து கையில் உருட்டி உருட்டி சாதம் கலந்து கொடுப்பார்கள். அவர்களாக போறும் எல்லோரும் எழுந்திருங்கோ அப்படின்னு சொன்னால்தான் எழுந்திருப்போம். அந்த சாதம் அவ்வளவு ருசியா இருக்கும்.
இதை மறக்க முடியுமா.
அதேபோல வத்தக்குழம்பு இரண்டு நாள் ஆனாலும் பழையது சாப்பிடும்போது கையில் ஒரு உருண்டை பழைய சாதம் பிசைந்து உருட்டி கை கட்டைவிரலால் நடுவிலே ஒரு குழி செய்து கொண்டு அதில் ஒரு சிறு கரண்டி வத்தக்குழம்பை விட்டுண்டு சாப்பிடும்போது அந்த ருசிக்கு ஈடு இணை கிடையாது.
இதெல்லாம் இந்த தலைமுறை மக்கள் பெரிதும் விரும்பாத அறியாத ருசியாகும். ஆன்லைனில் ஆர்டர் செய்து பெயர் புரியாமல் பீட்ஸா பர்கர் அது இது என்று புரியாத பெயர்கள் கொண்ட உணவுகளை சாப்பிடும் இன்றைய தலைமுறைக்கு தெரியாது.
அதேபோல் குளத்திலோ ஆற்றிலோ முங்கி குளிக்கும் சுகமே தனி.
வீட்டில் காய்க்கும் நாரத்தங்காய் மாங்காய் புளி இவைகளை பறித்து ஊறுகாய் போட்டு தெரிந்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தது மறக்கவே மறக்காது.
சாயந்திரம் ஆனால் வாசல் திண்ணையில் உட்கார்ந்து அக்கம் பக்கம் உள்ள பெண்களோடு அரட்டை அடித்து சிரித்தது மறக்கவே முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...