"பட்டையும்,கொட்டையும் போட்டுட்டு ஊரை ஏமாத்தலாமா..!
மொத்தமா நாமத்த போட்டுட்டான்...!
கோவிந்தா கோவிந்தா...!"
இதெல்லாம் நம்மூர்ல பயன்படுத்தும் சில பிரபலமான வசனங்கள்...!
இது சினிமாவானாலும் சரி... நம்மிடையே நண்பர்கள் காமெடிக்காக பேசும் சொலவடை ஆனாலும் சரி...!
பொதுவாக பார்த்தால் காமெடியாக தெரியும்.
ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள்... நம் சமய அடையாளங்களை கேலி செய்து #விஷவிதையை தொடர்ந்து தூவி கொண்டிருக்கும் திராவிட கூட்டமும், நக்சல்கள் நிறைந்த சினிமாவும், ஏன் மிஷனரியும் கூட இவ்விசயத்தில் தொடர்ந்து வெற்றியும் பெற்று கொண்டிருக்கிறார்கள்..!
இன்று பொதுவெளியில் நெற்றியில் கொஞ்சம் பெரியதாக #திலகம் இட்டு வந்தாலே பெரிய #பக்தி_பழம் ன்னு பட்டம் தான் கிடைக்கும்..! நானும் அப்பப்போ இந்தவித கேலி,கிண்டலுக்கு ஆளாகி உள்ளேன் என் சிறுவயதில் இருந்து இப்போது வரை பல தடவை...! முன்பு பல இடங்களில் என்பெயர் தெரியாத இடங்களில் என் அடையாளம் என்பது "அந்த பொட்டு வைத்த பையன்" என்பது தான்...! எனக்கு விவரம் தெரிந்து என்னோட எட்டு வயசில் இருந்து இப்போது வரை என் நெற்றியில் குங்குமம் அல்லது விபூதி கண்டிப்பாக இருக்கும் எங்கு சென்றாலும்...!
இந்தவிதமான ஒருவித கேலி,கிண்டலுக்கு பயந்து தான் இந்த காலத்து #இந்து_பிள்ளைகள் பலர் பாழ் நெற்றியோடு வலம் வருகிறார்கள்...! நான் பெரிதும் மதிக்கும் சாஸ்திரம் அறிந்த பிராமண சமுதாய பிள்ளைகள் கூட நிறைய பேர் இவ்வாறே வலம் வருவதை பார்க்கும்போது மனம் கொஞ்சம் வேதனை அடைகிறது...! நாகரிகம் கருதி எவ்வளவு வேண்டுமானாலும் மாறலாம்..! உயர் பதவிகளுக்கு வரலாம்...! ஆனால் நம் தொன்மையான கலாச்சார, பண்பாட்டுகளை கொஞ்சம் மறக்காமல் இருப்பது நல்லது...!
"நீறில்லா நெற்றி பாழ்..!
நெய்யில்லா உண்டி பாழ்..!"
என்கிறார் ஔவையார்...!
இன்று இதை பதிவிட தோன்றியது இன்று பார்த்த #பிக்பாஸ் நிகழ்ச்சியால்...! இந்த பெண்மணியை பார்த்து ஒருவன் கேட்கிறான்..! மேலும் இதில் ஒரு போட்டியாளராக பங்கு பெறும் காமெடி(??)நடிகர் #இமானுயேல் எனும் #இமான்_அண்ணாச்சியும் குழந்தைகளை வைத்து #கலைஞர்_டிவியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை போன வாரம் பார்த்தேன். அதில் #திருநீற்றை பத்தி மிகவும் கேவலமாக
மாட்டு சாணத்தில் இருந்து தானே வருகிறது. எப்படி அதை நெற்றியில் பூசுறீங்க..?
மோந்து பார்த்தால் சாணத்தின் வாசனை வருமே..!?
என்று மிகவும் கேவலமாக பேசினார்...!
கொஞ்சம் யோசித்து பாருங்கள்...! மாற்றுமத அடையாளங்களையோ, அவர்களின் பழக்க வழக்கங்களையோ என்றேனும் நாம் கிண்டல் செய்துள்ளோமா என்று...!
போனது போகட்டும்...! அவர்களை சொல்லி குற்றமில்லை...! நம் குழந்தைகளுக்கு நம் #சனாதன_தர்மத்தின் தொன்மையை, பெருமையை எடுத்து சொல்வோம்...! வாரம் ஒருமுறையாவது கோவில்களுக்கு கூட்டி செல்வோம்...!
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று உரைப்போம்...!
No comments:
Post a Comment