எத்தனை வயது ஆனாலும் புதிய புதிய அதிர்ச்சிகளின் வழியே புதிய புதிய பாடங்களை வாழ்க்கை கற்றுக் கொடுத்துக் கொண்டே வருகிறது.
நல்ல சைவ சிந்தனையாளராக ஒருவரை கண்டு அவரது நிகழ்ச்சியை வாழ்த்தி மகிழ்ந்த இரண்டே நாட்களில் அவரது பழைய வீடியோக்கள் வந்து அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
தருமபுர ஆதீன குருமணிகளை வணங்கி நெற்றி நிறைய வீபூதி பூசி என் அம்மை அப்பனை போற்றி பேசியவர் சிலை வழிபாட்டை வெறுக்கும் இஸ்லாமியராம். எம் ஆண்டாளை அவமதித்து பேசும் வீடியோ கண்டு மிரண்டு போனேன். தவறான ஆளுக்கு விளம்பரம் கொடுத்து விட்டேனோ என்று வெட்கினேன்.
ஒரு கணநேரம் நான் முட்டாளா? என்று மனம் குறுகி போனேன்.
இல்லை ! நான் முட்டாள் இல்லை !
என் ஈசன்/அம்பிகையின் திருப்பெயரை யார் போற்றினாலும் அவர் அந்த சமயத்தில் எனக்கு உகந்தவரே !
எல்லாம் ஈசன் செயல் !


ஓம் நமச்சிவாய !!
No comments:
Post a Comment